இந்தியா

ரூ.5.84 கோடி மதிப்​புள்ள 3 கிலோ தங்க பிஸ்கெட், வெளிநாட்டு கரன்ஸி பறிமுதல்: விஜயவாடாவில் 5 பேர் கைது

என்.மகேஷ் குமார்

விஜய​வாடா: ரூ.5.84 கோடி மதிப்​புள்ள 3 கிலோ தங்க பிஸ்கெட், வெளி​நாட்டு கரன்ஸி நோட்​டு​களை வைத்​திருந்த 5 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

வங்​கதேசத்​தில் இருந்து கொல்​கத்தா வழி​யாக ஹைதராபாத்துக்கு தங்​கம் கடத்​து​வ​தாக ஹைத​ரா​பாத் மற்​றும் விஜய​வாடா வரு​வாய் புல​னாய்​வுத்துறை அதி​காரி​களுக்கு(டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்​தது. அதன்​பேரில் விஜயவா​டா​வில் முகாமிட்ட அதி​காரி​கள், ஹைத​ரா​பாத் நோக்கி செல்​லும் கார்​களை சோதனை​யிட்​டனர். அப்​போது, ஒரு காரின் ரகசிய அறையில் 60 ஆயிரம் அமெரிக்க டாலர்​கள், 21,500 யூரோ கரன்ஸி பதுக்கி வைத்திருப்பது தெரிய​வந்​தது.

இதுதொடர்​பாக 2 பேரை அதி​காரி​கள் கைது செய்தனர். இவர்​கள் கொடுத்த தகவலின் பேரில், அதே வழி​யில் ஹைத​ரா​பாத்தை நோக்கி சென்ற பேருந்​தில் சோதனை​யிட்​டனர்.

அதில் பயணம் செய்த 3 பேர், தங்​களின் இடுப்​பில் அணிந்​திருந்த பெல்ட்​டில் 3.147 கிலோ எடையுள்ள 3 தங்க பிஸ்​கெட்​டு​கள் வைத்திருந்தனர். தங்க பிஸ்​கெட் மற்​றும் வெளி​நாட்டு கரன்ஸிகளின் மொத்த மதிப்பு ரூ.5.84 கோடி. அவற்றை பறிமுதல் செய்ததுடன் தொடர்​புடைய 5 பேரை​யும் கைது செய்த அதிகாரிகள் அவர்​களை நீதி​மன்​றக் காவலில் வைத்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT