கோப்புப் படம்

 
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் மோதல்: துப்பாக்கி சண்டையில் 3 பேர் காயம் - 2 கிராமங்களுக்கு தீ வைப்பு

செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தில் மீண்​டும் வன்​முறை வெடித்​துள்​ளது. துப்​பாக்​கிச் சண்​டை​யில் 3 பேர் படுகாயமடைந்த நிலை​யில், 2 கிராமங்​களுக்கு தீ வைக்​கப்​பட்​டது.

மணிப்​பூரில் பெரும்​பான்​மை​யாக உள்ள மைதேயி சமூகத்​தினர் மற்​றும் குகி பழங்​குடி​யினர் இடையே கடந்த 2023-ல் கல​வரம் ஏற்​பட்​டது.

அம்​மாநிலத்​தில் இரு பிரி​வினரிடையே அடிக்​கடி மோதல் வெடித்து வரு​கிறது. வன்​முறை்யில் இது​வரை 300-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், மணிப்​பூரின் காம்​ஜோங் மாவட்​டத்​தில் குகி அதி​கம் வசிக்​கும் சாசாட் கிராமத்​துக்​குள் நேற்று முன்​தினம் மர்ம நபர்​கள் புகுந்து துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர். இதில் 36 வய​தான நபர் ஒரு​வர் கொல்​லப்​பட்ட நிலை​யில், 4 பேர் படுகாயம் அடைந்​தனர்.

இதையடுத்து, இந்​தத் தாக்​குதலுக்கு பழிவாங்​கும் வித​மாக காம்​ஜோங் மாவட்​டத்​தில் டாங்​குல் நாகா மக்​கள் வசிக்​கும் கிராமத்​துக்​குள் நேற்று புகுந்த மர்ம நபர்​கள் துப்​பாக்​கிச்​சூடு நடத்​தினர்.

இருதரப்​புக்​கும் இடை​யில் துப்​பாக்​கிச் சண்டை நடந்​த​து. இதில் டாங்​குல் நாகா இனத்​தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்​தனர். பல வீடுகள் சேதமடைந்​தன.

இதற்​கிடை​யில், இந்​தியா-மியான்​மர் எல்லை அருகே உள்ள ஸ்​கிப் மற்​றும் பிலோங் ஆகிய இரண்டு டாங்​குல் நாகா கிராமங்​களுக்கு, குகி ஆயுதக் குழு​வினர் தீ வைத்​த​தாகக் கூறப்​படு​கிறது. எனினும், இந்த சம்​பவத்​தில் உயி​ரிழப்பு எது​வும் ஏற்​பட​வில்லை.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT