இந்தியா

வெடிகுண்டு செயலிழக்கச் செய்த சத்தீஸ்கர் போலீஸார் 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

நாராயண்பூர்: நக்சலைட்கள் புதைத்து வைத்திருந்த வெடி குண்டுகளை செயல் இழக்கம் செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீஸார் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கரில் சரணடைந்த நக்சலைட்கள் பலர் வெடிகுண்டுகள் மறைத்த வைக்கப்பட்டிருந்த இடத்தை போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து கன்கெர் - நாராயண்பூர் எல்லையில் நக்சல் ஒழிப்பு போலீஸார் வெடிகுண்டுகளை அகற்றி, வனப் பகுதிக்கு கொண்டு சென்று செயல் இழக்கம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாரதவிதமாக ஒரு குண்டு வெடித்தது. இதில் ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் உயிரிழந்தனர். காயம் அடைந்த காவலர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT