இந்தியா

பிஹாரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

ஜமுய்: பிஹார் மாநிலத்​தில் பயிற்சி வகுப்​புக்கு சென்​று​விட்டு வீடு திரும்​பிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

பிஹார் மாநிலம் ஜமுய் பகு​தி​யில் சனிக்​கிழமை மாலை பயிற்சி வகுப்பை முடித்​து​விட்டு இருசக்​ககர வாக​னத்​தில் பதின்​பருவ மாணவர் மற்​றும் மாணவி வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தனர். அப்போது, அவர்​களை வழிமறித்த ஒரு கும்​பல், அவர்​களைத் தாக்கியதுடன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்​தது.

இதுதொடர்​பான புகாரின் பேரில், போக்ஸோ சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​துள்ள காவல் துறை, இது​வரை 3 பேரைக் கைது செய்​துள்​ளது.

இச்​சம்​பவம் தொடர்​பான காணொலிகள் சமூக வலை​தளங்​களில் பரவி அதிர்​வலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அந்​தக் காணொலி​யில், மாணவன் இருசக்கர வாக​னத்தை ஓட்ட, மாணவி பின்​னால் அமர்ந்து செல்​கிறார். அப்​போது அவர்​களைச் சூழ்ந்​து​கொள்​ளும் ஒரு கும்​பல், அவர்​களிடம் தகாத முறை​யில் கேள்வி எழுப்​பித் தாக்கு​கிறது. அவர்​கள் இரு​வரும் தாங்​கள் ஒரே பள்​ளி​யில் படிப்​ப தாக​வும், வீட்​டில் சொல்​லி​விட்​டுத்​தான் வந்​திருப்​ப​தாக​வும் கூறி, கைகூப்​பித் தங்​களை விட்​டு​விடு​மாறு கெஞ்​சுகிறார்​கள்.

ஆனாலும், அக்​கூட்​டத்​தில் இருந்த ஒரு​வன் மாணவனின் சட்​டையைப் பிடித்து இழுத்து முகத்​தில் அறை​கிறான். மற்​றொரு வீடியோ​வில், தப்​பியோட முயன்ற மாண​வியைப் பலவந்​த​மாகப் பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து தூக்​கிக் கொண்டு ஓட முயலும் கொடூரக் காட்​சிகளும் இடம்​பெற்​றுள்​ளன.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து ஜமுய் எஸ்பி விஸ்​வஜீத் தயாள் கூறும்​போது, “இந்த சம்​பவம் செப்​டம்​பர் 19 மாலை 6 முதல் 7 மணி​யள​வில் நடந்துள்ளது. இதில், தொடர்​புடைய 3 பேர் இது​வரை கைது செய்யப்​பட்​டுள்​ளனர். காணொலி காட்​சிகளின் அடிப்​படை​யில் அடை​யாளம் காணப்​பட்​டுள்ள மற்ற நபர்​களைப் பிடிக்​கத் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்டு தேடு​தல் வேட்டை நடை​பெற்று வருகிறது. இச்​சம்​பவத்​தில் குறைந்​தது 6 முதல் 7 இளைஞர்களுக்குத் தொடர்​பிருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது” என்​றார்.

ராகுல் கண்​டனம்

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்​ காந்​தி கூறும்போது, “பிஹாரில் மாலை 7 மணிக்கு ஒரு பெண் பொதுச் சாலை​யில் பாது​காப்​பாக நடமாட முடி​யா​விட்​டால் அதற்கு அம்​மாநில அரசு​தான் பதிலளிக்க வேண்​டும். பெண் மீது அதி​காரம் செலுத்த இவர்​களுக்கு யார் உரிமை கொடுத்​தது? இது கலாச்​சா​ரம் அல்ல, ஆண்​களின் ஆதிக்க மனப்​பான்​மை.

இத்​தகைய போக்​கு​களை நியாயப்​படுத்​தும்​போது​தான் சிலர் இது​போன்ற பாலியல் வன்​கொடுமை செயலில் தயக்​கமின்றி ஈடுபடுகின்​றனர். இது கண்​டனத்​துக்​குரியது” என்​றார்​.

SCROLL FOR NEXT