இந்தியா

சத்தீஸ்கரில் 29 பேர் கொல்லப்பட்ட வழக்கு: 10 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

வரும் 16-ல் தண்டனை விவரம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

பஸ்தார்: சத்​தீஸ்​கரில் 29 பேர் கொல்​லப்​பட்ட வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 10 பேரும் குற்​ற​வாளி​கள் என தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மே 25-ம் தேதி சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் மாவட்​டத்​தில் உள்ள ஜிராம் பள்​ளத்​தாக்​கில், காங்​கிரஸ் கட்சி நடத்​திய பரிவர்​தன் பேரணி முடிந்து திரும்​பிக் கொண்​டிருந்த தலை​வர்​களின் வாகன அணிவகுப்பை மாவோ​யிஸ்ட்​கள் வழிமறித்​துத் தாக்​கினர். இந்​தத் தாக்​குதலில் சத்​தீஸ்​கர் மாநில காங்​கிரஸ் தலை​வர் நந்த் குமார் படேல் உட்பட 29 பேர் கொல்​லப்​பட்​டனர்.

இதுதொடர்​பாக பஸ்​தார் மாவட்ட போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். பின்​னர் இந்த வழக்கு என்ஐஏ அமைப்​பிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணை ஜக்​தால்​பூரிலுள்ள என்ஐஏ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

வழக்​கில் என்ஐஏ அதி​காரி​கள் கடந்த 2014-ல் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தனர். மேலும் 101 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டனர். விசா​ரணை முடிந்த நிலை​யில் என்ஐஏ நீதிபதி அபய் சிங் ராஜ்புத் நேற்று தீர்ப்பு வழங்​கி​னார்.

அப்​போது வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட 10 பேரும் குற்​ற​வாளி​கள் என நீதிபதி அறி​வித்​தார். மேலும் 10 பேருக்​கான தண்​டனை விவரங்​கள் வரும் 16-ம் தேதி அறிவிக்​ககப்​படும்​ என்​று அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT