இந்தியா

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் 26 பேர் சரண்

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலம் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தைச் சேர்ந்த 26 பேர் நேற்று சரணடைந்​தனர்.

இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல்​துறை கண்​காணிப்​பாளர் (எஸ்பி) கிரண் சவான் கூறிய​தாவது: "சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் இயக்​கத்தை சேர்ந்த ஏழு பெண்​கள் உட்பட 26 பேர் காவல் துறை மற்​றும் மத்​திய ரிசர்வ் போலீஸ் அதி​காரி​கள் முன்பு ஆயுதங்​களை ஒப்​படைத்து இன்று (புதன்​கிழமை) சரணடைந்​தனர். இதில், 13 பேரின் தலைக்கு மொத்​தம் ரூ.65 லட்​சம் பரிசுத் தொகை அறிவிக்​கப்​பட்​டிருந்​தது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மாநிலத்​தின் ‘‘பூனா மார்​கம்’’ (புனர்​வாழ்​விலிருந்து சமூக மறு ஒருங்​கிணைப்பு வரை) முன்​முயற்​சி​யின் கீழ் இந்த 26 மாவோ​யிஸ்ட்​களும் சரணடைந்​துள்​ளனர். இவர்​கள் அனை​வரும் மக்​கள் விடு​தலை கொரில்லா ராணுவத்​தின் (பிஎல்​ஜிஏ) தெற்கு பஸ்​தர் பிரிவு, மாட் பிரிவு மற்​றும் ஆந்​தி​ரா-ஒடிசா எல்லை பிரிவு ஆகிய​வற்​றில் தீவிர​மாக செயல்​பட்டு வந்​தவர்​கள். மேலும், அபுஜ்​மாத், சுக்மா மற்​றும் ஒடி​சா​வின் அரு​கிலுள்ள பகு​தி​களில் நடந்த பல வன்​முறை சம்​பவங்​களில் இவர்​களுக்கு தொடர்​புள்​ளது.

ரூ.10 லட்சம் வெகுமதி: இதில், லாலி என்ற முச்​சகி ஆய்தே லக்மு (35) என்ற மாவோ​யிஸ்ட் குழு உறுப்​பினரின் தலைக்கு மட்​டும் ரூ.10 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. ஏனெனில் இவர், கடந்த 2017-ம் ஆண்​டில் ஒடி​சா​வின் கோ​ராபுட் சாலை​யில் நடந்த கண்​ணி வெடி தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வர்.

அந்த தாக்​குதலில் 14 பாது​காப்புப் படை​யினர் கொல்​லப்​பட்​டனர். இந்த நிலை​யில், மாநில அரசின் புனர்​வாழ்வு கொள்​கை​யால் ஈர்க்ப்​பட்டு தாங்​கள் சரணடை​யும் முடிவுக்கு வந்​த​தாக மாவோயிஸ்ட்​கள் தெரி​வித்​துள்​ளனர். இவ்​வாறு கிரண்​ சவான்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT