இந்தியா

அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவுடன் 23 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்பு: மம்தாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: அபிஷேக் பானர்​ஜிக்கு எதி​ராக அதி​கரித்து வரும் அதிருப்தி மற்​றும் திரிண​மூல் காங்​கிரஸ் நாடாளு​மன்​றக் குழு​வில் பிளவு ஏற்​படலாம் என்ற யூகங்​களுக்கு மத்​தி​யில், அக்​கட்​சி​யின் 23 எம்​.பி.க்​கள் அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் குழு​வுடன் தொடர்​பில் இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் 15 ஆண்​டுகளாக ஆட்​சி​யில் இருந்த மம்தா பானர்​ஜியை வீழ்த்தி பாஜக முதல் ​முறை​யாக ஆட்​சியை பிடித்​துள்​ளது. பாஜக சார்பில் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.

மம்​தா​வின் தோல்​வியை தொடர்ந்து அவரது திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்​குள் மோதல் தீவிரம் அடைந்​துள்​ளது. கட்​சி​யின் அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் சுமார் 60 பேர் ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் அணி திரண்​டனர். இதையடுத்து சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் பதவியை ரிதப்​ரதா பானர்ஜி கைப்​பற்​றியது மம்​தாவுக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

மேலும் திரிண​மூல் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் பலர் தங்​கள் கட்​சிப் பதவியை ராஜி​னாமா செய்​தனர். சிலர் கட்​சியி​லிருந்து வெளி​யேறினர். கவுன்சிலர்கள், கொல்கத்தா மேயரும் ராஜினாமா செய்தனர்.

திரிண​மூல் கட்​சிக்​குள் ஏற்​பட்​டுள்ள அரசி​யல் குழப்​பம் தற்​போது மேற்கு வங்​கத்தை தாண்டி நாடாளு​மன்​றத்​துக்​கும் பரவுவ​தாக தெரி​கிறது.

திரிண​மூல் எம்​பிக்​கள் இடையே​யும் தற்​போது அதிருப்தி நிலவு​கிறது. கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்​ஜி​யின் செயல்​பாடு​களில் எம்​.பி.க்​கள் பலர் மகிழ்ச்சி அடைய​வில்லை என்று கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் சுமார் 23 எம்​.பி.க்​கள், அதிருப்தி எம்​எல்​ஏ.க்​கள் குழு​வுடன் தொடர்​பில் இருப்​ப​தாக​வும், வரும் நாட்​களில் கட்​சி​யின் நாடாளு​மன்​றக் குழு​வில் பிளவு ஏற்​படு​வதை தவிர்க்க முடி​யாது என்​றும் நம்​பக​மான வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT