இந்தியா

லஷ்கர், ஜெய்ஷ் அமைப்புகளை சேர்ந்த 23 பேர் தீவிரவாதிகளாக அறிவிப்பு

யுஏபிஏ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​பாகிஸ்​தான் ஆதரவு பெற்ற ஜெய்​ஷ்-இ-​முகமது, லஷ்கர்​-இ-தொய்பா போன்ற அமைப்​பு​களைச் சேர்ந்த 23 பேரை மத்​திய அரசு நேற்று முன்தினம் தீவிர​வா​தி​களாக அறி​வி்த்​தது.

அவர்​களில் லஷ்கர் நிறு​வனர் ஹஃபீஸ் சயீ​தின் நெருங்​கிய கூட்டாளி​கள் ரானா இப்​தி​கார், அப்​துல் ரவூஃப், ஹஃபீஸ் காலித் வலீத் ஆகிய மூவரும் அடங்​கு​வர். சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் (யுஏபிஏ), மத்​திய உள்​துறை அமைச்​சகம் இந்த அறி​விப்பை வெளி​யிட்​டது.

ஜம்மு காஷ்மீரில் தீவிர​வாத செயல்​களுக்கு ஆட்​கள் சேர்ப்​பு, ஊடுரு​வல், ட்ரோன்​கள் மூலம் ஆயுத விநி​யோகம் மற்​றும் தாக்குதல்​களுக்​குத் திட்​ட​மிடு​தல் போன்ற சதி திட்​டங்​களில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மேற்​கொள்​ளப்​பட்ட சட்​ட​விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்​டத் திருத்​தத்​தின்​படி, தீவிர​வாத அமைப்​பு​கள் மட்​டுமன்றி தனி நபர்​களை​யும் தீவிர​வா​தி​களாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டது. இதன் மூலம், சம்பந்தப்​பட்ட தீவிர​வா​தி​களின் நிதி ஆதா​ரங்​களை முடக்க​வும், சொத்​து​களைப் பறி​முதல் செய்​ய​வும் என்​ஐஏ நடவடிக்கை எடுக்க முடி​யும்.

SCROLL FOR NEXT