இந்தியா

பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

தமிழ்​நாட்​டில் விஜய் தலை​மை​யில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுக​வின் போக்​கில் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. தொகுதி வரையறை மசோ​தாவை கடுமை​யாக எதிர்த்த திமுக, இப்​போது அதற்கு ஆதர​வளிக்க சில நிபந்​தனை​களை விதித்​தது. மேலும் டெல்​லி​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுட​னான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் திமுக எம்.பி. கனி​மொழி கருணாநிதி கலந்து கொண்​டார். மாநிலங்​களவை எம்.பி.​யான கனி​மொழி சோமு​வும், அரசி​யலில் நிரந்தர எதிரி​கள் இல்லை என கூறியிருந்தார்.

இதையடுத்து சமூகவலை​தளங்​களி​லும் திமுக-​பாஜக நெருக்​கம் பற்​றிய செய்​தி​கள் விமர்​சனங்​களு​டன் வெளி​யாகி வரு​கின்​றன. இதன் மீதான ஒரு கேள்விக்கு மக்​களவை எம்.பி.​யான கனி​மொழி, பாஜக​வுடன் எந்​தக் கூட்​ட​ணி​யும் இல்லை என பதில் அளித்திருந்தார். எனினும், திமுக-​பாஜக உறவு தொடர்​பான பேச்சுக்​கள் அடங்​கிய​பாடில்​லை.

தற்​போது வட மாநில நாளேடு​களும் இதுகுறித்து செய்தி வெளியிடத் தொடங்கி விட்​டன. குறிப்​பாக, பிரதமர் மோடி பெரிய அளவில் மாற்​றம் செய்​யும் அமைச்​சர​வை​யில் திமுக​வும் இடம்​பெறப் போவ​தாகக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் திமுக எம்.பி.க்​கள் வட்​டாரம் கூறுகையில், ‘காங்​கிரஸுட​னான உறவு முறிந்​த​தால் திமுக​வுக்கு ஒரு தேசி​யக் கட்​சி​யின் நட்பு அவசி​ய​மாகிறது.

அப்​போது​தான் தமிழ்​நாட்​டில் ஆளும் தவெகவை சமாளிக்க முடியும். இதனால், பாஜக​வுடன் நட்பை ஏற்​படுத்​தும் முயற்சி ஒரு​புறம் இருப்​பினும், அதன் அமைச்​சர​வை​யில் இணைவோமா எனத் தெரிய​வில்​லை. கட்​சித் தலை​மை​தான் இறுதி முடிவு எடுக்​கும்” என்​றார்.

இதனிடையே, பிரதமர் மோடி, 20-க்​கும் மேற்​பட்ட அமைச்சர்களின் இலா​காக்​களை மாற்ற விரும்​புவ​தாகத் தெரிகிறது. சிலரின் பணிச்​சுமை​யைக் குறைக்​க​வும், சிலருக்கு புதிய மற்​றும் கூடு​தல் பொறுப்​பு​கள் வழங்​க​வும், சிலரை விடுவித்து மீண்​டும் கட்​சிப் பணிக்கு அனுப்​ப​வும் வாய்ப்​புள்​ளது. இந்நிலையில் திமுக தொடர்பான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT