இந்தியா

வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் - 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

புவேனஸ்வர்: ஒடி​சா​வில் இருந்து சீனா​வுக்கு புறப்​பட்ட சரக்கு கப்பல் வங்​காள விரி​கு​டா​வில் கவிழ்ந்து மூழ்​கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாய​மான 22 பேரை தேடும் பணி​யில் இந்​திய கடற்​படை மற்​றும் இந்​திய கடேலார காவல்​படை தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளன.

பனாமா நாட்​டுக்கு சொந்​தமான ‘எம்வி ஓசி​யன் வின்​னர்’ என்​கிற சரக்கு கப்​பல், ஒடி​சா​விலிருந்து 1,700 டன் இரும்​புத் தாது கனிமங்களை எடுத்​துக்​கொண்​டு, கடந்த வியாழக்​கிழமை இரவு 10.30 மணி​யள​வில் சீனாவை நோக்கி புறப்​பட்​டது. இந்​தக் கப்பலில் சீனாவைச் சேர்ந்த 20 பேர், மியான்​மரைச் சேர்ந்த 3 பேர் மற்​றும் வங்​கதேசத்​தைச் சேர்ந்த ஒரு​வர் என 24 மாலுமிகள் இருந்தனர்.

இந்​நிலை​யில் ஒடி​சா​வில் இருந்து 200 கடல் மைல் தொலை​வில் வங்​காள விரி​கு​டா​வில் சென்று கொண்​டிருந்​த​போது, இந்த சரக்கு கப்​பல் திடீரென கவிழ்ந்​தது. சற்று நேரத்​தில் கப்​பல் முழு​வது​மாக கடலில் மூழ்​கியது. கப்​பலில் இருந்த மாலுமிகள் அனை​வரும் நீரில் மூழ்கி தத்​தளித்​தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்​ததும் இந்​திய கடற்​படை மற்றும் கடலோரா காவல் படை​யின் மீட்பு குழுக்​கள் சம்பவ இடத்துக்கு விரைந்​தன. அந்த குழுக்​கள் மேற்​கொண்ட தீவிர மீட்பு பணி​யில் 2 மாலுமிகள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். இன்​னும் 22 மாலுமிகளின் கதி என்ன என்​பது தெரிய​வில்​லை. அவர்​களை பத்திர​மாக மீட்​ப​தற்​கான முயற்​சி​யில் மீட்பு குழுக்​கள்​ தீவிர​மாக ஈடுபட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT