இந்தியா

அசாம் மாநிலத்தில் பெரும் கலவரம் - 2 பேர் உயிரிழப்பு; 58 போலீஸார் படுகாயம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாம் மாநிலத்​தின் கர்பி ஆங்​லாங் பகு​தி​யில் நேற்று 2-வது நாளாக பெரும் கலவரம் ஏற்​பட்​டது. இதில் ஐபிஎஸ் அதி​காரி​கள் உட்பட 58 போலீ​ஸார் காயம் அடைந்​தனர். இன்டர்நெட் சேவை​யும் தடை செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் பதற்றம் நில​வு​கிறது.

அசாம் மாநிலத்​தில் கர்பி பழங்​குடி​யினரின் அமைப்​பு​களின் தன்னாட்சி கவுன்​சில் எல்​லைக்கு உட்​பட்ட அரசு மேய்ச்​சல் நிலங்களில் பிஹார் மற்​றும் நேபாளத்​தைச் சேர்ந்த பலர் குடியேறி உள்​ளனர். அவர்​களை அங்​கிருந்து வெளி​யேற்ற வேண்டும் என்று கர்பி பழங்​குடி​யினத்​தவர்​கள் நீண்ட கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர். தங்​களது கோரிக்​கைகளை வலியுறுத்தி மேற்கு கர்பி ஆங்​லாங்​கின் பெலங்பி என்ற பகு​தி​யில் கடந்த 2 வாரங்​களாக பழங்​குடி​யினர் 9 பேர் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

அவர்​களின் உடல்​நிலை மோசம் அடைந்​ததை தொடர்ந்து கடந்த திங்​கட்​கிழமை அவர்​களை மருத்​துவ சிகிச்​சைக்​காக போலீ​ஸார் வலுக்​கட்​டாய​மாக குவாஹாட்டிக்கு அழைத்​துச் சென்​றனர். இதனால் ஆத்​திரம் அடைந்த பழங்​குடி​யினத்​தவர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில், 2-வது நாளாக நேற்று போராட்​டம் நடை​பெற்​றது.

கர்பி பகு​தி​களில் இருந்த வாக​னங்​களை தீ வைத்து கொளுத்தினர். கடைகளில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்களை வெளி​யில் போட்டு வெடிக்க செய்​தனர். கலவரத்தை அடக்க வந்த போலீ​ஸார் மீது அம்​பு​கள் எய்​தனர். கற்களை வீசி​யும் தாக்​குதல் நடத்​தினர். இதனால் நிலைமை கட்டுக்​கடங்​காமல் போனது. போலீ​ஸார் கண்​ணீர் புகை குண்டுகள் வீசி கும்​பலை கலைக்க முயற்​சித்​தனர். இதில் 2 பேர் உயி​ரிழந்​தனர்.

அவர்​களில் ஒரு​வர் கர்பி இனத்​தைச் சேர்ந்​தவர் என்று அடையாளம் காணப்​பட்​டுள்​ளது. கரோனி மார்க்​கெட் பகு​தி​யில் பெங்​காலி ஒரு​வர் உயி​ரிழந்​துள்​ளார். பொது​மக்​களில் எத்​தனை பேர் காயம் அடைந்​துள்​ளனர் என்ற விவரம் வெளி​யாக​வில்​லை. மேலும் ஐபிஎஸ் அதி​காரி​கள் உட்பட 58 பேர் படு​கா​யம் அடைந்தனர்.

அவர்​கள் ஆம்​புலன்ஸ் மூலம் மருத்​து​வ​மனைக்கு அழைத்து செல்லப்​பட்​டனர். கலவரம் பெரி​தானதால், கர்பி ஆங்​லாங் மற்றும் மேற்கு கர்பி ஆங்​லாங் ஆகிய 2 மாவட்​டங்​களில் இன்டர்நெட் சேவை துண்​டிக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT