சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ரஜோக்கே கிராமம் இந்தியா, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அமைந்துள்ளது. இந்நிலையில் கிராமம் வழியாக நேற்று அதிகாலை 12.30 மணிக்கு 2 பேர் பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.
இதைப் பார்த்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், திரும்பிச் செல்லுங்கள் என்று அவர்களை நோக்கி எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர்கள் எல்லை வழியாக தொடர்ந்து ஊடுருவினர். இதையடுத்து பிஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேரும் உயிரிழந்தனர்.