இந்தியா

உத்தவ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் ஷிண்டே அணியில் சேர திட்டம்: மகாராஷ்டிர அமைச்சர் கருத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த 2022-ல் சிவசேனா கட்​சி​யில் பிளவு ஏற்​பட்​டது. ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான அணி பாஜக கூட்​ட​ணி​யில் இணைந்​தது. தற்போது உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான அணி​யைச் சேர்ந்த 9 மக்​களவை எம்​.பி.க்​களில் 6 பேர் கடந்த சில தினங்​களுக்கு முன்பு ஷிண்டே தலைமையிலான சிவசே​னா​வில் இணைந்​தனர்.

இந்​நிலை​யில், சிவசேனா (உத்​தவ்), தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார்), காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய மகா விகாஸ் அகாடி கூட்​ட​ணிக் கட்சி எம்​எல்​ஏ-க்​கள் கூட்​டம் 2 நாட்​களுக்கு முன்பு நடை​பெற்​றது. இதில் ​கூட்​ட​ணி​யைச் சேர்ந்த 60 எம்​எல்​ஏ.க்​களில் 37 பேர் மட்​டுமே பங்​கேற்​றனர்.

இந்​நிலை​யில், உத்​தவ் தாக்​கரே சிவசே​னாவைச் சேர்ந்த 20 எம்​எல்​ஏ-க்​களில் 14 பேர், துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலைமையி​லான சிவசே​னா​வில் இணைய உள்​ள​தாக மகாராஷ்டிர அமைச்​சரும் ஷிண்டே கட்​சி​யின் மூத்த தலைவருமான குலாப் ராவ் பாட்​டீல் தெரி​வித்​துள்​ளார்.

சிவசேனாவின் மற்​றொரு அமைச்​சர் உதய சமந்த் கூறுகையில், ‘‘அப்​படிப்​பட்ட ஆபரேஷன் எது​வும் நடக்​க​வில்​லை. ஆனால் எதிர்க்​கட்சி எம்​எல்​ஏ.க்​கள் பலர் தாங்​களாகவே ஷிண்​டேவுடன் இணைய ஆர்​வம் காட்​டு​கின்​றனர்’’ என்று கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT