இந்தியா

ம.பி.யின் குவாலியர் கோயில் விழாவில் லாரி மோதியதில் 14 பக்தர்கள் உயிரிழப்பு; 40 பேர் காயம்

பிரேக் செயலிழந்ததால் விபரீதம்

செய்திப்பிரிவு

குவாலியர்: குவாலியரில் ஷீதள மாதா கோயில் விழா​வின்​போது தரிசனத்​துக்​காக காத்​திருந்​தவர்​கள் மீது லாரி மோதி​யதில் 14 பக்​தர்​கள் உயி​ரிழந்​தனர். 40-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர்.

மத்​திய பிரதேசத்​தின் குவாலியர் நகர் அருகே சடாவ் கிராமத்​தில் 350 ஆண்​டுகள் பழமையான ஷீதள மாதா கோயில் அமைந்​துள்​ளது. குழந்தை வரம் வேண்டி இந்​தக் கோயிலுக்கு ஏராளமான பக்​தர்​கள் செல்​வது வழக்​கம்.

நவ​ராத்​திரி விழாவை ஒட்டி இக்​கோயி​லில் சனிக்​கிழமை இரவு முதல் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன. அம்​மனை வழிபட பக்​தர்​கள் மிக நீண்ட வரிசையில் காத்​திருந்​தனர். கோயில் வளாகத்​துக்கு வெளியே சின்​னர் சாலை வரை வரிசை நீண்​டிருந்​தது.

ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலை 1.30 மணிக்கு சின்​னர் சாலை வழி​யாக நெல் மூட்​டைகள் ஏற்​றப்​பட்ட இரு லாரி​கள் வந்​தன. சாலை​யில் பக்​தர்​கள் கூட்​டம் இருப்​ப​தைப் பார்த்த இரு லாரி​களின் ஓட்​டுநர்​களும் பிரேக் பிடித்​தனர். ஆனால் ஒரு லாரி​யின் பிரேக் செயலிழந்து லாரி நிற்​காமல் சென்​றது.

மலைப் பகுதி என்​ப​தால் சரிவான சாலை​யில் அதிவேக​மாக கீழே இறங்​கிய லாரி பக்​தர்​கள் மீது மோதி​யது. இதில் 14 பேர் சம்​பவ இடத்​திலேயே உடல் நசுங்கி உயி​ரிழந்​தனர்.

40-க்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​தனர். அவர்​கள் அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். அவர்​களில் 6 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது.

பிரதமர் மோடி இரங்​கல்

உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதி​யில் இருந்து உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.2 லட்​சம், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50,000-ம் வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார்.

இந்த விபத்து குறித்து குவாலியர் போலீ​ஸார் கூறிய​தாவது: இரு லாரி​களின் ஓட்​டுநர்​களுக்​கும் பாதை தெரியாமல் கூகுள் மேப்பை பயன்​படுத்தி உள்​ளனர். இதன்​படி இரு லாரி​களும் வழிதவறி ஷீதள மாதா கோயில் பகுதிக்கு வந்​துள்​ளன.

முன்​னால் வந்த லாரி​யின் பிரேக் செயலிழந்து பக்​தர்​கள், சாலை​யோர கடைகள் மீது அடுத்​தடுத்து மோதி உள்​ளது. லாரி​யின் ஓட்​டுநர், உரிமையாளரை கைது செய்து உள்​ளோம். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதனிடையே, நகர காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட் டுள்ளார். 8 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT