இந்தியா

அகிலேஷ் யாதவ் பேரணியில் பூ தூவ வந்த புல்டோசர் மோதி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கோரக்பூர்: உத்தர பிரதேச சட்​டப்​பேர​வைக்கு விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, முதல்​வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்​தத் தொகு​தி​யான கோரக்​பூரில் சமாஜ்​வாதி கட்​சி​யின் ‘பிடிஏ ரத யாத்​திரை’ நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க சாலை​யில் பேரணி​யாக சென்ற அக்​கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவை வரவேற்க, பூ இதழ்​களை தூவிக் கொண்டிருந்த புல்​டோசர் மோதி​ய​தில் 12 வயது சிறு​வன் உயிரிழந்​தான்.

அந்த சிறு​வன் சவுரி சவுரா பகு​தி​யில் உள்ள ராஜ்​தானி கிராமத்தைச் சேர்ந்த ஆர்​ய​வர்​தன் சிங் (12). இதுகுறித்து ஆர்​ய​வர்​தனின் தந்​தை​யும் உள்​ளூர் பாஜக நிர்​வாகி​யு​மான ஓம்​கார் சிங் கூறும்​போது, “கேந்​திரிய வித்​யாலயா பள்​ளியி​லிருந்து எனது மகளை அழைத்து வரு​வதற்​காக என் மகன் ஆர்​ய​வர்​தன் சாலையை கடந்து கொண்​டிருந்​தான்.

அப்​போது, அகிலேஷின் வாக​னங்​கள் ஏற்​கெனவே முன்​னேறிச் சென்று விட்ட நிலை​யில், அதிவேக​மாக வந்த புல்​டோசர் இயந்திரம் பின்​னால் இருந்து என் மகன் மீது மோதி உள்​ளது. இதில் தலை​யில் பலத்த காயமடைந்​த​தால் உயி​ரிழந்​தான்” என்றார். பேரணி அலட்​சி​யம் குறித்தும், சமாஜ்வாதி கட்சியினரின் நடத்தைக்கும் பாஜக​வினர் கண்​டனம்​ தெரிவித்துள்​ளனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT