

புதுடெல்லி: ‘அக்வான்’ புயலை எதிர்கொள்வதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படை 5 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் 31 குழுக்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.
இந்தப் புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வந்தது. மாநில அதிகாரிகளுடன் இணைந்து முக்கிய இடங்களில் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளதாக மீட்புப் படை தெரிவித்துள்ளது. அவசரத் தேவைக்காக மேலும் 18 குழுக்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடக்கும் பகுதி ஆந்திராவின் நர்சாபுரம் முதல் ஒடிசாவின் புரி வரை நீளும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, ஒடிசாவில் 14 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் 9, தெலங்கானாவில் 3, தமிழகத்தில் 3 குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளன. சத்தீஸ்கரிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் தலா ஒரு குழு நிறுத்தப்பட்டுள்ளது.