இந்தியா

ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அல்​-​காய்​தா, ஐஎஸ்​ஐஎஸ் போன்ற தடை செய்​யப்​பட்ட தீவிர​வாத அமைப்​பு​களு​டன் தொடர்​புடைய 12 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக டெல்லி அதி​காரி​கள் கூறிய​தாவது: பல்​வேறு மாநிலங்​களில் ஆந்​திரா மற்​றும் டெல்லி காவல் துறை​யினர் இணைந்து நடத்​திய ஒரு கூட்டு நடவடிக்​கைக்கு பிறகு 12 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

          

ஆந்​தி​ரா​வில் முகமது ரஹ்மத்​துல்லா ஷரீப், மிர்சா சோகைல் பெக், முகம்​மது டேனிஷ் என 3 பேரும், பிஹாரில் ஷத்​மான் தில்​குஷ், அஜ்​மானுல்லா கான் ஆகிய இரு​வரும் டெல்​லி​யில் லக்கி அகமது என்​பவரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இது​போல் மீர் ஆசிப் அலி (மேற்கு வங்​கம்), ஜீஷன் (ராஜஸ்​தான்), அப்​துல் சலாம் (கர்​நாட​கா), ஷாருக்​கான், ஷியாக் பியாஸ் உர் ரஹ்​மான் (மகா​ராஷ்டி​ரா), சைதா பேகம் (தெலங்​கா​னா) ஆகியோ​ரும் கைது செய்​யப்​பட்​டனர்.

இவர்கள் ஒரு சூதாட்ட செயலி மூலம் அல்​-​காய்தா மற்​றும் ஐஎஸ்​ஐஎஸ் அமைப்​பு​களின் வெளி​நாட்​டுத் தலை​வர்​களை சந்​தித்​து, பின்​னர் அவர்​களு​டன் இணைந்​துள்​ளனர். ஐஎஸ்​ஐஎஸ் அமைப்​புடன் தொடர்​புடைய ‘பெனெக்ஸ் டாட் காம்' என்ற குழு​வுடன் அவர்​களுக்​குத் தொடர்பு இருக்​கிறது.

இவர்​கள் தங்​கள் சமூக ஊடகப் பதிவு​களில் தேசி​யக் கொடிக்கு பதிலாக ஐஎஸ்​ஐஸ் கொடியை பயன்​படுத்​தி​யுள்​ளனர். மேலும், இவர்​கள் தேசி​யக் கொடியை எரித்​து, ஐஎஸ்​ஐஎஸ் அமைப்பை புகழ்ந்து பேசி​யுள்​ளனர். இந்​தி​யாவை ஓர் இஸ்​லாமிய நாடாக மாற்ற வேண்​டும் என வலி​யுறுத்தி வந்​தனர்.

மேலும் விசா​ரணை​யில் இவர்​கள் பயிற்​சிக்​காக ஒரு மாதத்​திற்​குள் பாகிஸ்​தான் செல்ல திட்​ட​மிட்​டிருந்​தது தெரிய​வந்​தது. இவர்​கள் இளைஞர்​களை பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி பெறு​மாறு ஊக்​கு​வித்​தும் வந்​தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு டெல்லி அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT