பிரதமர் மோடி | படம்: எக்ஸ் 
இந்தியா

யுஏஇ, கத்தாருக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பினார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். அபுதாபியில் சுவாமி நாராயண் இந்து கோயிலை அவர் இந்த பயணத்தின் போது திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகம் சென்று பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது அல் நஹ்யானை சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யுஏஇ-யில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் பிறகு இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். தொடர்ந்து புதன்கிழமை அன்று அபுதாபியில் சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் கத்தார் நாட்டுக்கு சென்றார். அண்மையில் கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு பிரதமரை இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்புக்கும் இடையில் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் பேசி இருந்தனர். ‘எனது கத்தார் பயணம் இந்தியா-கத்தார் நட்புறவில் புதிய பாதையை வகுக்கும்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.

SCROLL FOR NEXT