இந்தியா

பிஹார் படகு விபத்​தில் 11 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரின் ராம்​பூர் ஷாயா​மாக் பகு​தி​யில் நடந்த உள்ளூர் விழாவில் பங்​கேற்க வைஷாலி பகு​தியை சேர்ந்த 30-க்​கும் மேற்​பட்​டோர் கங்கை நதி​யில் படகில் சென்​றனர்.

நதி​யின் மையப் பகு​தி​யில் படகு சென்று கொண்​டிருந்​த​போது எதிர்​பா​ராத​வித​மாக கவிழ்ந்​தது. படகில் இருந்த அனை​வரும் நதியில் விழுந்து தத்​தளித்​தனர். சிலர் மட்​டும் நீந்தி கரையேறினர். உள்​ளூர் மக்​கள் மற்​றும் பேரிடர் மீட்​புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். 11 பேர் சடலமாக மீட்​கப்​பட்​டனர். அவர்​களில் பெரும்​பாலானோர் சிறுவர்கள். 10-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டு உள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT