மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், கல்யாண்-அஹில்யாநகர் நெடுஞ்சாலையில் உள்ள கோவிலி கிராமத்தில் நேற்று காலை சிமென்ட் கலவை இயந்திர லாரி ஒன்று அங்குள்ள பாலத்தை கடந்துள்ளது. அப்போது எதிரே பயணிகளுடன் வேகமாக சென்ற வேன் லாரி மீது மோதியது. இதில் வேன் பலத்த சேதம் அடைந்தது.
விபத்து பற்றி அறிந்த உள்ளூர் மக்களும் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் வேனில் இருந்து 3 பெண்கள், 8 ஆண்கள் என 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.