இந்தியா

காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திற‌ப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கா​விரி மேலாண்மை ஆணை​யம் தமிழகத்​துக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்​தர​விட்ட நிலை​யில், கர்​நாடக அரசு 10,000 கன அடி நீரை தமிழகத்​துக்கு திறந்​து​விட்​டுள்​ளது.

கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணை​யக் கூட்​டத்​தில் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என உத்​தர​விட்​டது. இதற்கு மறுப்பு தெரி​வித்த கர்​நாடக அரசு, உச்​ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக தெரி​வித்​தது.

இந்​நிலை​யில் மைசூரு, மண்​டியா ஆகிய இடங்​களில் விவ​சாய சங்​கத்​தினர் நீர் திறக்​கக்​கூ​டாது என வலி​யுறுத்தி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மண்​டி​யா​வில் போராட்​டம் நடத்​திய கன்னட அமைப்​பினரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று மாலை 7 மணி நில​வரப்​படி, மைசூரு​வில் கடல் மட்​டத்​தில் இருந்து 2284 அடி உயரத்​தில் உள்ள க‌பினி அணை​யின் நீர்​மட்​டம் 2282.10 அடி​யாக உள்​ளது.

அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 230 கன அடி நீர் வந்​து​கொண்​டிருக்​கும் நிலை​யில், அணை​யில் இருந்து தமிழகத்​துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்​து​விட‌ப்​பட்​டுள்​ள‌து.

SCROLL FOR NEXT