இந்தியா

தெலுங்கானா: ஏரி​யில் அடித்​துச் செல்லப்பட்ட 10 பேரிடர் மீட்புப் படை​யினர் பத்திரமாக கரை திரும்பினர்

என். மகேஷ்குமார்

ஹைத​ரா​பாத்: தெலுங்கானா மாநிலத்​தில் 2 படகு​களில் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​ட​போது தண்​ணீரில் அடித்​துச் செல்​லப்​பட்ட ஆந்திர மாநில பேரிடர் மீட்​புப் படையைச் சேர்ந்த 10 பேர் பத்திரமாகக் கரை சேர்ந்​த​தாக நேற்று மாலை அறிவிக்​கப்​பட்​டது.

ஆந்​தி​ராவை ஒட்டி அமைந்​துள்ள கம்​மம் மாவட்​டத்​தி​லும் முரசு புயலின் தாக்​கம் காணப்​பட்​டது. கடந்த புதன்​கிழமை (4-ம் தேதி) மாலை, சாத்​துப்​பள்ளி மண்​டலத்​தில் உள்ள பேதுபல்லி ஏரி​யில் 3 மீனவர்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​ட​தாகக் கூறப்​படுகிறது.

அவர்களை மீட்க ஆந்​திர மாநில பேரிடர் மீட்​புக் குழு​வினர் 2 படகுகளில் சென்​றனர். ஆனால், அந்​தப் படகு​கள் ஏரி​யில் கவிழ்ந்த​தால் மீட்​புக் குழு​வினரும் தண்​ணீரில அடித்​துச் செல்லப்பட்​டனர். காணா​மல் போனவர்​களை தேடும் பணி நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை மீட்​புப் படை​யினர் 10 பேரும் எவ்​வித காய​மும் இன்றி பாது​காப்​பாகக் கரை சேர்ந்​தனர். முதலில் காணா​மல் போன​தாகக் கூறப்​பட்ட 3 மீனவர்​களும் பாதுகாப்​பாகக் கரை சேர்ந்தனர். இந்த தகவலை கம்​மம் மாவட்​ட ஆட்​சி​யர் திவாகரா நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT