யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது:
உத்தர பிரதேச வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கட்சித் தொண்டர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். பெயர் நீக்கங்களால் 28 நகர்ப்புற உள்ளாட்சித் தொகுதிகளில் கட்சியின் பலம் குறைகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி உத்தர பிரதேசத்தில் 16 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது சுமார் 13 கோடி பேர் மட்டுமே உள்ளனர்.
மேலும், பஞ்சாயத்துத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் உள்ள 66 லட்சம் பேரின் பெயர்கள் சட்டப்பேரவைத் தொகுதி பட்டியலில் இல்லை. அரசு நலத்திட்டப் பயனாளிகளில் 55 லட்சம் பேரின் பெயர்களும், 18-19 வயதுடைய சுமார் 4.5 லட்சம் இளைஞர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளன.
முந்தைய திருத்த நடவடிக்கையின்போது மாநில வாக்காளர் பட்டியலில் 4 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது கவலையளிக்கிறது.
எனவே, தகுதியுள்ள அனைவரும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்ய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்து வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் சேர்க்கப்படுவதை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.