சுற்றுச்சூழல்

தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் சார்பில் உலக ஈரநிலங்கள் தினம் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு ஈரநிலங்கள் இயக்​கம் சார்​பில் உலக ஈரநில தினம் சென்னை அடை​யாறு கழி​முகத்​தில் நேற்று கொண்​டாடப்​பட்​டது. தமிழக அரசு, தமிழ்​நாடு ஈரநிலங்கள் இயக்​கம் மூலம், ஈரநிலங்​களின் பாது​காப்பு மற்​றும் மேலாண்​மைக்​கான பல்​வேறு நடவடிக்​கைகளை, விழிப்​புணர்வு ஏற்​படுத்​துதல் போன்ற பணி​களில் ஈடு​பட்டு வரு​கிறது.

ஈரநிலங்​களின் முக்​கி​யத்​து​வத்தை வலி​யுறுத்​தி, அவற்​றின் பாது​காப்பை ஊக்​குவிக்​கும் நோக்​கில், ஒவ்​வோர் ஆண்​டும் பிப்​.2-ம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் கடைபிடிக்​கப்​படு​கிறது.

          

ஈரநிலங்கள் முக்கிய பங்கு: தமிழ்​நாடு ஈரநிலங்கள் இயக்​கம் சார்​பில் உலக ஈரநிலங்கள் தின கொண்​டாட்​டங்​கள், சென்னை அடை​யாறு கழி​முகத்​தில் நேற்று நடை​பெற்​றது. சென்னை வனக்​கோட்​டம் மற்​றும் எஸ்​ஆர்​எம் ராமாபுரம் வளாகம் ஒத்​துழைப்​புடன் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், அடை​யாறு கழி​முகப் பகு​தி​யில் இயற்கை நடை, சுத்​தம் செய்​யும் பணி​கள் நடை​பெற்​றன.

முக்கிய வாழிடங்கள்: இதில் வனத்​துறைத் தலை​வர் மற்​றும் ஈரநிலங்கள் ஆணைய உறுப்​பினர் செயலர் னி​வாஸ் ரெட்டி பங்​கேற்று பேசி​ய​தாவது: சென்னை போன்ற நகர்ப்​புறங்​களில், அதிக மழை பெய்​யும் காலங்​களில் வெள்​ளநீரை உறிஞ்சி மெது​வாக வெளி​யேற்​று​வதன் மூலம் வெள்ள பாதிப்​பு​களைக் குறைப்​ப​தில் ஈரநிலங்கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றன.

மேலும், புலம்​பெயரும் பறவை​கள் மற்​றும் பிற உயி​ரினங்​களுக்கு ஈரநிலங்கள் முக்​கிய வாழிடங்​களாக உள்​ளன. திட்​ட​மிடப்​ப​டாத நகரமய​மாக்​கல், கழி​வுநீர் புகுதல் மற்​றும் திடக்​கழிவு மேலாண்மை குறை​பாடு காரண​மாக ஈரநிலங்கள் சுருங்கி வரு​வ​தால் நகர்ப்​புறங்​களில் வெள்ள அபா​யம் அதி​கரித்​துள்​ளது.

இயற்கை நடை​யின்​போது, அடை​யாறு கழி​முகத்​தின் சூழலியல் முக்​கி​யத்​து​வம், ஈரநில உயி​ரிசைவு, சூழல் சேவை​கள் மற்​றும் காலநிலை மாற்​றத் தாங்​குதலில் ஈரநிலங்​களின் பங்கு குறித்து மாணவர்​களுக்கு விளக்​கப்​பட்​டது. தூய்​மைப் பணி​யில் 86 கிலோ பிளாஸ்​டிக் கழி​வு​கள் அகற்​றப்​பட்​டன.

இந்​நிகழ்ச்​சி​யில் சென்னை வனப் பாது​காவலர் எஸ்​.என்​.தேஜஸ்​வி, துணை வனப் பாது​காவலர் (ஈரநிலங்கள்) போ​சாலேசச்​சின், சென்னை மாவட்ட வன அலு​வலர் வி.ஏ.சர​வணன்​ உள்​ளிட்​டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT