சுற்றுச்சூழல்

நீலகிரி மஞ்சூர் பஜாரில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை - மக்கள் அச்சம்

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் சமீப காலமாக காட்டெருமை, கரடி, சிறுத்தை, குரங்கு உட்பட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வன விலங்குகளின் நடமாட்டம் அங்குள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு மஞ்சூர் மேல் பஜார் சாலையில் குடியிருப்புக்கு எதிரே சாலையில் சிறுத்தை உலா வந்தது. இந்த காட்சி அங்கிருந்த கடைகளின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இப்பகுதியில் உலாவரும் விலங்குகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT