கொடைக்கானல் பெருமாள்மலையில் ஊதா வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் ஜக்கரன்டா மிமோசி போலியா மரம்.

 
சுற்றுச்சூழல்

கொடைக்கானலில் கோடை காலத்தை வரவேற்க ஊதா நிறத்தில் பூத்துக் குலுங்கும் ‘ஜக்கரன்டா’

ஆ.நல்லசிவன்

பழநி: கோடை காலத்தை வரவேற்க, கொடைக்​கானல் மலைப்​பகு​தி​யில் ஊதா வண்​ணத்​தில் பூத்​துக் குலுங்​கும் ஜக்​கரன்டா மிமோசி​போலியா மலர்​கள் சுற்​றுலாப் பயணி​களை வெகு​வாக கவர்ந்துவரு​கின்​றன.

கொடைக்​கானல் மலைப் பகு​தி​களில் பல்​வேறு கால நிலைகளில் பூக்​கும் அரிய​வகை பூச்​செடிகள் அதி​கள​வில் உள்​ளன.

          

அந்த வகை​யில் கோடை காலத்​தில் மட்​டுமே பூக்​கும் தென் அமெரிக்​காவை தாயக​மாக கொண்ட, ‘ஜக்​கரன்டா மிமோசி​போலி​யா’ என்ற மரத்​தில் ஊதா வண்ண மலர்​கள் கொடைக்​கானல், பெரு​மாள்​மலை, வட க​வுஞ்​சி, அஞ்சு வீடு உள்ளிட்ட பகு​தி​களில் வனப்​பகு​தியிலும், வீடு​களி​லும், சாலை​யோரங்​களி​லும் பூத்​துக் குலுங்​கு​கின்​றன.

இந்த வகை மரம் இந்​தியா மட்​டுமின்றி ஆப்​பிரிக்​கா, சீனா, ஆஸ்​திரேலி​யா, வடக்கு ஆப்​பிரிக்​கா, ஸ்பெ​யின் உள்​ளிட்ட நாடு​களில் மலைத்​தொடர்​கள், வனப்​பகு​தி​யில் அதி​களவில் காணப்படுகின்றன.

இந்தவகை மரங்​கள் பூக்​கள் பூக்​கும் தருணத்தில், அனைத்து இலைகளும் தானாகவே உதிர்ந்துவிடும் வினோத தன்மை கொண்டது. இந்த பூக்களில் 5 மடல்​கள் இருக்கும். தற்​போது மரத்​தில் ஒரு இலை கூட இல்​லாமல், மொத்த மரமும் ஊதா வண்​ணமாக நிரம்பி ரம்​மிய​மாகக் காட்சி தரு​கின்​றன.

இந்தப் பூக்​களை சுற்றுலா பயணி​கள் வெகு​வாக ரசித்​தும், மரங்​களுக்கு அரு​கில் நின்று புகைப்​படம் எடுத்​தும் மகிழ்​கின்​றனர். இதுகுறித்து தோட்​டக்​கலை துறை​யினர் கூறும்போது, ஜக்​கரன்டா மிமோசி​போலியா பூக்​களுக்கு ப்ளு குல்​மோஹர் என்ற பெயரும் உண்​டு.

கோடை காலத்தை வரவேற்​கும் வித​மாக கோடை காலத்​தில் மட்​டுமே இந்த வகை பூக்​களை பார்க்க முடி​யும். மே மாதம் வரை இந்த பூக்​கள் பூத்​துக் குலுங்​கும் எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT