குன்னூர் அருகே ரன்னிமேடு பகுதியில் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த யானைகள்.

 
சுற்றுச்சூழல்

ஊட்டி மலை ரயில் பாதையில் முகாமிட்ட யானைகள்

செய்திப்பிரிவு

குன்னூர்: குன்​னூர் அருகே மலை ரயில் பாதை​யில் முகாமிட்​டிருந்த 11 யானை​களை விரட்​டும் பணி​யில் வனத்​துறை​யினர் ஈடு​பட்​டனர். நீல​கிரி மாவட்ட வனப்​பகு​தி​களில் வறட்சி நில​வுவ​தால், யானைகள் இடம்​பெயர்ந்து வரு​கின்​றன.

இதனால், நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் - மேட்​டுப்​பாளை​யம்மலைப்​பாதை​யில் யானைகள் கூட்​ட​மாக முகாமிட்​டு உள்​ளன.

          

ஊட்டி மலை ர​யில் செல்​லும் பாதையில், குன்​னூர் ரன்​னிமேடு அருகே ரயில் தண்​ட​வாளங்​களில் 11 யானை​கள் நேற்று முகாமிட்டு இருந்​தன.

இதுகுறித்த தகவல் அறிந்த வனத்​துறை​யினர், யானை​களை சமவெளிப் பகு​தி​களுக்கு விரட்​டும் பணி​யில் ஈடு​பட்​டனர். அவை

மீண்​டும் தண்​ட​வாளப்​பகு​திக்கு வர விடா​மல், வனப்​பகு​திக்​குள் விரட்​டும் பணி​யில் தொடர்ந்து ஈடு​பட்டு வரு​வ​தாகத் தெரி​வித்​துள்ளனர்​.

SCROLL FOR NEXT