சுற்றுச்சூழல்

கொடுங்கையூரில் 37 லட்சம் டன் பழைய கழிவுகள் அகற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் 37 லட்​சம் டன் பழைய கழிவுகள் பயோமைனிங் முறை​யில் அகற்​றப்​பட்​டுள்​ளன. இப்​பணி​களை துரிதப்​படுத்த மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் அறி​வுறுத்​தி​னார்.

இதில் உள்ள 66,52,506 மெட்​ரிக் டன் திடக்​கழி​வு​கள் ரூ.640.83 கோடி​யில் பயோமைனிங் முறை​யில் பணி 6 சிப்​பங்​களாக பிரிக்​கப்​பட்டு நிலத்தை மீட்​டெடுப்​ப​தற்​காக 3 ஒப்​பந்​த​தா​ரர்​கள் வாயி​லாக அகழ்ந்​தெடுத்​து, பிரித்​தெடுக்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இப்​பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்​தார். அப்​போது, இந்த வளாகத்​தில் திடக்​கழி​வு​கள் அகற்​றும் பணி​யை துரிதப்​படுத்தி உரிய காலத்​துக்​குள் நிலத்தை மீட்​டெடுக்க வேண்​டும்.

இந்த பணி​களை தாமதமின்றி ஒப்​பந்​த​தா​ரர்​கள் மேற்​கொள்ள வேண்​டும். அலு​வலர்​கள் இதன் மீது தனிக் கவனம் மேற்​கொண்டு தொடர் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என்று அறி​வுறுத்​தி​னார்.

இது​வரை 37,57,529 மெட்​ரிக் டன் திடக்​கழி​வு​கள் அகற்​றப்​பட்டு 3 ஏக்​கர் நிலம் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த 3 ஏக்​கர் நிலத்​தில் 881 பசுமை நாட்டு மரக்​கன்​றுகள் நடப்​பட்​டுள்​ளதை​யும் மாநக​ராட்சி ஆணை​யர் பார்​வை​யிட்​டார்.

அம்மா உணவகத்​தில் ஆய்வு

மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன், அண்ணா நகர், டெய்​லர்ஸ் சாலை​யில் உள்ள அம்மா உணவகத்​தில் இரவு சாப்​பாடு நேரத்​தில் நேற்​று​முன்​தினம் திடீர் ஆய்வு மேற்​கொண்​டு, அதன் செயல்​பாடு​கள், பொது​மக்​கள் வரு​கையை பார்​வை​யிட்​டார்.

பின்​னர், இரவு உணவு சாப்​பிட்ட மக்​களிடம் கலந்​துரை​யாடி உணவின் தரம் குறித்து கேட்​டறிந்​தார். ரூ.3-க்கு ஒரு செட் சப்​பாத்தி வழங்​கப்​படு​வதை​யும், அதற்கு பருப்பு கடைசல் வைத்​திருப்​ப​தை​யும் பார்​வை​யிட்​டும், சாப்​பிட்​டுப் பார்த்​தும் தரத்​தை ஆய்வு செய்​தார்.

மேலும், சமையலறை​யில் இருப்​பில் உள்ள பொருட்​கள் விவரங்​களை​யும், பாத்​திரங்​கள், கை கழு​வும் இடங்களை பார்​வை​யிட்​டு, எரி​வாயு சிலிண்​டர் இருப்​பில் உள்​ளதை​யும், குடிப்​ப​தற்கு தூய நீர் வழங்​கப்​படு​வதை​யும் பார்​வை​யிட்​டார்.

முதல்​வர் விஜய் உத்​தர​வுப்​படி, ஒவ்​வொரு நாளும் மக்​களுக்கு தரமான உணவு வழங்க வேண்​டும் என பணி​யாளர்​களிடம் ஆணை​யர் அறி​வுறுத்​தி​னார்.

மேலும், மாநக​ராட்சி சார்​பில், 383 அம்மா உணவகங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. அவற்றை சிறப்​பாக பராமரித்​து, மக்​களுக்கு தரமான உணவு வழங்​கு​வதை உறுதி செய்​ய​வும், மண்டல அளவில் அலு​வலர்​களை நியமனம் செய்து கண்​காணிக்​க​வும் ஆணை​யர் உத்​தர​விட்​டார்.

ஆய்​வின் போது, மாநக​ராட்சி இணை ஆணை​யர் (சுக​தா​ரம்) வீ.ப.ஜெயசீலன், வடக்கு வட்​டார துணை ஆணை​யர் கட்​டா ரவி தேஜா ஆகியோர்​ உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT