வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும், விஐடி பல்கலையும் சுகாதார துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

 
கல்வி

சுகாதாரத் துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள சிஎம்சியுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

வேலூர்: சு​கா​தார துறை​யில் ஆராய்ச்சியை மேற்​கொள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்​து​வக் கல்​லூரி (சிஎம்​சி) மற்​றும் விஐடி பல்​கலைக்​கழகம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளன.

இந்த ஒப்​பந்​தத்தில் கையெ ழுத்​திடும் நிகழ்ச்சி நேற்று வேலூர் கிறிஸ்தவ மருத்​து​வக் கல்​லூரி​யில் நடை​பெற்​றது. கல்​லூரி முதல்​வர் சாலமன் சதீஷ் கு​மார் மற்​றும் விஐடி பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் புரிந்​துணர்வு ஒப்​பந்​த​தில் கையெழுத்​திட்​டனர்.

          

இதைத்​தொடர்ந்து விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் முன்​னிலை​யில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் பரி​மாறப்​பட்​டன. இந்த ஒப்​பந்​தம் மூலம் வேலூர் கிறிஸ்தவ மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் விஐடி பல்​கலைக்​கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்​கள் இணைந்​து, சுகா​தார துறையில் ஆராய்ச்சி மற்​றும் மேம்பாட்டை ஊக்​குவிக்க இணைந்து செயல்​பட​ உள்​ளனர்.

மேலும், பேராசிரியர்​கள் மற்​றும் மாணவர்​களிடையே கல்வி மற்​றும் அறி​வியல் அனுபவங்​களை பகிர்ந்​து ​கொள்ள ஊக்​கு​விப்​பதும் முக்​கிய நோக்​கங்​களில் ஒன்​றாகும்.

இந்​நிகழ்​வில் விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசும்​போது, “வேலூர் கிறிஸ்தவ மருத்​து​வக் கல்​லூரி நாட்​டிலேயே சிறந்த மருத்​து​வ​மனை​களில் ஒன்​றாக விளங்கி வரு​கிறது. கடந்த 1948-ல் உலகின் முதல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது.

இந்​தி​யா​வில் முதல் செவிலியர் கல்​லூரி 1946-ல் தொடங்​கப்​பட்​டது. 1961-ல் இந்​தி​யா​வின் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது. 1971-ல் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது.

1986-ல் இந்​தி​யா​வின் முதல் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது. வேலூர் கிறிஸ்தவ மருத்​து​வக் கல்​லூரி நாட்​டிலேயே எப்​போதும் தனித்​து​வ​மாக விளங்கி வரு​கிறது” என்​றார்.

இதையடுத்​து, வேலூர் கிறிஸ்தவ மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை முதல்​வர் சாலமன் சதீஷ்கு​மார் பேசும்​போது, “இந்​தி​யா​வில் உயர்​கல்​வி​யில் முன்​னணி​யில் உள்ள விஐடி பல்​கலைக்​கழகம் பயோ இன்​ஜினியரிங், பயோ இன்ஃபர்​மேடிக்​ஸ், பயோமெட்​டீரியல்ஸ் ஆகிய துறை​களில் புதிய கண்​டு​பிடிப்​பு​களை உரு​வாக்கி வரு​கின்​றன.

இந்த ஒத்​துழைப்பு மூலம் நோயாளி​களுக்கு சிறந்த சுகா​தார தீர்​வு​களை வழங்க முடி​யும்” என்​றார். இதில், கிறிஸ்தவ மருத்​து​வக் கல்​லூரி இயக்​குநர் பிஜு ஜார்​ஜ், விஐடி துணைத் தலை​வர்​கள் சங்​கர் விசுவ​நாதன், சேகர் விசுவ​நாதன், செயல் இயக்​குநர் சந்​தியா பென்​டாரெட்​டி, துணைவேந்​தர் காஞ்​சனா பாஸ்​கரன், இணை துணை வேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக், சுகா​தார அறி​வியல் மற்​றும் பொறி​யியல் துறை முதன்​மையர் கீதா மணி​வாசகம் மற்​றும் கிறிஸ்தவ மருத்​து​வக் கல்​லூரி (ராணிப்​பேட்டை வளாகம்) இணை இயக்​குநர் தீபக் செல்​வ​ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT