கல்வி

ஆக.11-ல் குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: வரு​டாந்​திர தேர்வு கால அட்​ட​வணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளபடி, ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்​-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிடப்​படும் என்று டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​துள்​ளார்.

ஓராண்​டில் என்​னென்ன பதவி​களுக்கு தேர்​வு​கள் நடத்​தப்​படும்? அதற்​கான அறி​விப்பு எப்​போது வெளி​யிடப்​படும்? தேர்வு நடை​பெறும் நாட்​கள் ஆகிய விவரங்​கள் அடங்​கிய ஆண்டு தேர்வு கால அட்​ட​வணையை (Annual Planner) டிஎன்​பிஎஸ்சி ஆண்​டு​தோறும் வெளி​யிட்டு வரு​கிறது. அந்த வகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான தேர்வு அட்​ட​வணை​யில் இடம்​பெற்ற 6 தேர்​வு​களில் 3 தேர்​வு​களுக்கு அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டு, தேர்வு நடத்​து​வதற்​கான பணி​கள் நடந்து வரு​கி்ன்​றன. அதிக எண்​ணிக்​கையி​லான தேர்​வர்​கள் பங்​கேற்​கக்​கூடிய குரூப்​-2, குரூப்-4 மற்​றும் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்வு (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) ஆகிய 3 தேர்​வு​கள் மட்​டும் எஞ்​சி​யுள்​ளன.

குரூப்​-2, குரூப்-4 தேர்​வு​களுக்கு அறி​விப்பு வெளி​யிடப்​பட​வி்ல்லை என்​றாலும், அரசு மற்​றும் தனி​யார் பயிற்சி மையங்​களில் அதற்​கான பயிற்சி வகுப்​பு​கள் பல மாதங்​களுக்கு முன்பே தொடங்கி மும்​முர​மாக நடந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், ஆகஸ்ட் மாதம் அறிவிக்​கப்பட உள்ள போட்​டித் தேர்​வு​கள், காலி பணி​யிடங்​கள் குறித்து கேட்​ட​போது, டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் கூறிய​தாவது: டிஎன்​பிஎஸ்சி வெளி​யிட்ட 2026-ம் ஆண்​டுக்​கான தேர்வு கால அட்​ட​வணை​யில் குறிப்​பிடப்​பட்​டபடி, ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்​-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிடப்​படும்.

என்​னென்ன பதவி​கள், எத்​தனை காலி இடங்​கள் என்பன உள்​ளிட்ட முழு விவரங்​களும் அதில் இடம்​பெறும். அரசின் பல்​வேறு துறை​களில் இருந்து காலி இடங்​கள் பற்​றிய விவரங்​கள் தொடர்ந்து வந்த வண்​ணம் உள்​ளன. எனவே, எத்​தனை காலி இடங்​கள் என்​பதை இப்​போது கூற​முடி​யாது. தமிழக அரசின் பொதுத் துறை நிறு​வன​மான மின்​சார வாரி​யத்​தில் கணிச​மான காலி பணி​யிடங்​களை டிஎன்​பிஎஸ்சி மூலம் நிரப்​புவதற்​கான முன்​னேற்​பாடு​கள் நடந்து வரு​கின்றன.

காலி பணி​யிடங்​கள் வரப்​பெற்​றதும் அவற்​றின் தன்​மைக்கு ஏற்ப, ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வு, குரூப்​-2, குரூப்​-2ஏ அல்​லது குரூப்-4 தேர்​வுடன் சேர்க்​கப்​படும். ஏற்​க​னவே திட்​ட​மிட்​டபடி, குறித்த காலத்​தில் அறி​விப்பு வெளி​யிட்டு குறித்த தேதி​யில் தேர்வு நடத்​தி, தேர்வு முடிவு​களை விரைந்து வெளி​யிட வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதற்​கிடையே, மனிதவள மேலாண்​மைத் துறை அமைச்​சர் சரத்​கு​மார் மற்​றும் துறை​யின் உயர் அதி​காரி​களு​டன் சில நாட்​களுக்கு முன்பு ஆலோ​சனை நடத்​திய முதல்​வர் விஜய், அனைத்து துறை​களி​லும் உள்ள காலி பணி​யிடங்​களை முன்​னுரிமை அடிப்​படை​யில் நிரப்ப உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

எனவே, அடுத்த மாதம் அறிவிக்​கப்பட உள்ள குரூப்​-2, குரூப்​-2ஏ தேர்​விலும், அக்​டோபரில் அறிவிக்​கப்​படும் ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​விலும் காலி பணி​யிடங்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் இருக்​கக்​கூடும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT