கல்வி

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் மாணவர்​கள் எண்​ணிக்​கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி​யிடங்​களை நிர்​ண​யம் செய்ய வேண்​டுமென தொடக்​கக் கல்​வித்​துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்​கத் துறை கல்வி இயக்​குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்றறிக்கை விவரம்: இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்​படி ஆண்​டு​தோறும் மாணவர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி இடங்​கள் நிர்​ண​யம் செய்​யப்பட வேண்​டும். தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் உள்ள ஆசிரியர் பணி​யிடங்​கள் நிர்​ண​யம் செய்​வதற்​கான பொறுப்பு சம்பந்​தப்​பட்ட மாவட்​டக் கல்வி அதி​காரி​களுக்கே (தொடக்​கக் கல்​வி) உள்​ளது.

அதன்​படி நடப்​பாண்டு கடந்த ஆக.1-ம் தேதி நில​வரப்​படி மாணவர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் பணி நிர்​ண​யம் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். அளிக்கப்படும் விவரங்​கள் தவறானவை என கண்​டறியப்​பட்டால், சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்களே பொறுப்​பேற்க நேரிடும்.

மேலும், எண்ணிக்கை குறித்த அறிக்​கையை இயக்​குநரகத்​தில் அக்​.21 முதல் 28-க்​குள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நாட்​களில் சமர்ப்​பிக்க வேண்​டும். அந்​தந்த மாவட்​டக் கல்வி அதி​காரி​கள் இப்பணிகளை துரிதமாக மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT