பாலியல் வழக்கை மறைக்க முயன்ற காவல் அதிகாரிகள் குறித்து விசாரணை: ஜெம் வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது

பலத்த பாதுகாப்புடன் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
பாலியல் வழக்கை மறைக்க முயன்ற காவல் அதிகாரிகள் குறித்து விசாரணை: ஜெம் வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது
Updated on: 
1 min read

சென்னை: ஜெம் வீரமணிக்கு எதி​ரான பாலியல் வழக்கை மூடி மறைக்க காவல்​துறை உயர் அதி​காரிகளின் பங்​களிப்பு குறித்து விரி​வாக விசா​ரணை நடந்து வரு​வ​தாக அரசு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுத​விர மேலும் ஒரு வழக்​கில் வீரமணி கைது செய்​யப்​பட்​டார்.

ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கை போலீ​ஸார் சரி​யாக புலன் விசா​ரணை செய்​யாமல் மூடி மறைக்க முயற்​சித்​த​தாக​வும் இதனால், வழக்கை சிபிஐ-க்கு மாற்​றக்​கோரி​யும் வாராகி என்பவர் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​பாக நேற்று மீண்டும் விசா​ரணைக்கு வந்​தது. ஏற்​கெனவே உத்​தர​விட்​டபடி சிறப்பு புல​னாய்​வுக் குழு முன்​பாக ஆஜராகி தன்​னிட​மிருந்த ஆதா​ரங்​களை சமர்ப்​பித்​த​தாக மனுதாரர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. அப்​போது தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்யன், வழக்​கின் நிலை அறிக்​கையை தாக்​கல் செய்​தார்.

வீரமணிக்கு எதி​ரான பாலியல் வழக்கை மூடி மறைத்​த​தில் காவல்​துறை உயர் அதி​காரி​களின் பங்​களிப்பு என்ன என்​பது குறித்து சிறப்பு புல​னாய்​வுக் ​குழு விசா​ரிப்பதாகத் தெரி​வித்​தார்.

அதையடுத்து நீதிப​தி, இந்த வழக்கை போலீ​ஸாரும், போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி எஸ்​.பத்​மா​வும் சிறப்​பான முறை​யில் விசா​ரித்து வரு​வ​தாக பாராட்டு தெரி​வித்​தார்​. மேலும் சிபிஐ விசாரணைக்கு அவசிய மில்லை எனக் கூறி வழக்கை அக்​.26-க்கு தள்​ளி​வைத்​தார். இதற்​கிடை​யில் பாலியல் தடுப்பு பிரி​வில் பணியாற்​றிய தலை​மைக் காலர்​கள் மலர்​விழி, ராஜ்கு​மார், ஆகியோரை காத்திருப்​போர் பட்​டியலுக்கு மாற்றி காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டுள்​ளார்.

சிறை​யில் அடைப்பு

மேலும், வீரமணி​யால் பாதிக்​கப்​பட்ட மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒரு​வர் தற்​போது புகார் தெரி​வித்​துள்​ளார். இதன்​படி மேலும் ஒரு போக்சோ வழக்​கில், வீரமணி கைது செய்​யப்​பட்​டார்.

இதையடுத்​து, அவர் சிறை யில் இருந்து போலீஸ் பாது​காப் புடன் போக்சோ சிறப்பு நீதி​மன்​றத் துக்கு நேற்று அழைத்து வரப்​பட்டார். அவரை நீதிபதி எஸ்​.பத்மா, அக். 21 வரை நீதி​மன்ற காவலில் சிறை​யிலடைக்​க உத்​தர​விட்​​டார். இதையடுத்​து, வீரமணி மீண்​டும்​ புழல்​ சிறைக்​கு அழைத்​துச்​ செல்​லப்​பட்​​டார்​.

இந்த வழக்​கில் வீரமணி​யின் பாலியல் குற்​றச் செயல்​களை படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த கும்​பல் குறித்து மற்​றொரு பிரி​வினர் துப்​புதுலக்கி வரு​கின்​றனர். கோடிக்கணக்கான பணம் கைமாறியதாகவும் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதில் தொடர்​புடைய சிலர் வெளி​நாடு​களுக்கு தப்​பிச் சென்​றுள்​ளனர். அவர்​கள் குறித்​தும் போலீ​ஸார் தகவல் திரட்டி வரு​கின்​றனர்.

பாலியல் வழக்கை மறைக்க முயன்ற காவல் அதிகாரிகள் குறித்து விசாரணை: ஜெம் வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது
டிஎஸ்பி பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in