பள்ளிக் கல்வித் துறை 
கல்வி

கற்பித்தல் செயல்பாடு: ஆய்வு செய்ய வழிகாட்டு நெறிமுறை

செய்திப்பிரிவு

சென்னை: பள்​ளி​களில் புதிய பாடத்​திட்ட கற்​பித்​தல் செயல்​பாடு​களை ஆய்வு செய்ய வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதைப் பின்​பற்றி துறை அலு​வலர்​கள் ஆய்வு செய்ய வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து, பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை: தமிழகத்​தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை​யான பாடத்​திட்​டத்தை மாற்றி அமைக்​கு​மாறு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்சி நிறு​வனத்​துக்கு (எஸ்​சிஆர்​டிஇ) உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, முதல்​கட்​ட​மாக நடப்பு (2026-27) கல்​வி​யாண்​டில் 1 முதல் 3-ம் வகுப்​பு​களுக்கு முதல் பரு​வத்​துக்​கான புதிய பாடநூல்​கள் அறி​முகப்​படுத்​தப் பட்​டுள்​ளன.

இந்த வகுப்​பு​களில் ஆய்வு மேற்​கொள்​ளும் அனைத்து வித​மான துறை​சார்ந்த அலு​வலர்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் தற்​போது வெளி​யிடப்​படு​கிறது. அத்​துடன் ஆசிரியர் பதிவேடு குறித்த விவரங்​களும், பாட​வாரி​யான ஆய்​வுப் படிவங்​களும் இணைக்​கப்​பட்​டுள்​ளன. கல்வி அலு​வலர்​கள் இந்த வழி​காட்​டு​தல்​களை முறை​யாக பின்​பற்​றி, வகுப்​பறை கற்​பித்​தலை ஊக்​குவிக்​கும் வகை​யில் ஆய்வு மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT