கோப்புப் படம் 

 
கல்வி

TANGEDCO: பொறியியல் டிப்ளமா படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு!

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் டிப்ளமா படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் தொழில்பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டலம் மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சி (அப்ரண்டீஸ்) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த 2022, 2023, 2024, 2025, 2026-யில் பொறியியல் டிப்ளமா படிப்பை முடித்தவர்கள் (எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி) விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

இது தொடர்பான விரிவான அறிவிப்பு அக்டோபர் 28-ம் தேதி அன்று https://nats.education.gov.in/boat-srp.phb என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தகுதியுடைய நபர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக் கடைசி நாள் நவம்பர் 28-ம் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாதம்தோறும் உதவித்தொகை தொழில்பழகுநர் பயிற்சி பெறுவோருக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி நிறைவில் மத்திய அரசால் தொழில்பழகுநர் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் வைத்திருப்போருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT