கல்வி

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்​னை​யில் உள்ள அரசு திரைப்​படக் கல்​லூரி​யில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசின் எம்​ஜிஆர் திரைப்​படம் மற்​றும் தொலைக்​காட்சி பயிற்சி நிறு​வனம் சென்னை தரமணி​யில் அமைந்​துள்​ளது.

இக்​கல்​லூரி​யில் ஒளிப்​ப​திவு, டிஜிட்​டல் இன்​டர்​மீடியட், ஒலிப்​ப​திவு, இயக்​கம் மற்​றும் திரைக்​கதை எழுதுதல், எடிட்​டிங், அனிமேஷன் மற்​றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்​களில் இளங்​கலை பட்​டப்​படிப்பு (பேச்​சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்​ஸ்) வழங்​கப்​படு​கிறது.

இப்​படிப்​பு​களில் வரும் கல்வி ஆண்​டில் (2026-27) சேரு​வதற்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

மாணவர்​கள் இதற்​கான விண்​ணப்​பப் படிவம் மற்​றும் விளக்​கக் கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் மே 12 (இன்​று) முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்தை விண்​ணப்​பக் கட்​ட​ணம் மற்​றும் தேவை​யான ஆவணங்​களு​டன் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்​குள் ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். மேற்​கண்ட பட்​டப் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க பிளஸ்-2 முடித்​திருக்க வேண்​டும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT