படம்: எஸ்.சத்தியசீலன்

கல்வி

கிராமப்புற குழந்தைகள் உயர்கல்வி பெற மாணவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்: சென்னை ஐஐடி இயக்குநர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தேனாம்​பேட்​டை​யில் சுமங்​கலா ஸ்​டீல் நிறு​வனம் சார்​பில் கட்​டு​மான தொழிலா​ளர்​களின் குழந்​தைகளுக்கு பொறியியல் கல்வி பயிலும் வகை​யில் ‘உங்​கள் குழந்​தையும் ஆகலாம் இன்​ஜி​னியர்’ திட்​ட கல்வி உதவித்​தொகை வழங்​கும் விழா நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராக சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, ‘இந்து’ என்.ரவி ஆகியோர் கலந்து கொண்டு 70 மாணவர்​களுக்கு சுமார் ரூ.2.80 கோடிக்​கான ஊக்​கத்​தொகையினை வழங்​கினர்.

இந்த நிகழ்​வில் அவர்​கள் பேசிய​தாவது:

சென்னை ஐஐடி இயக்​குநர் வீ.காமகோடி: ஒவ்​வொரு மாணவருக்​கும் நல்ல கல்​லூரி​யில் படிக்க வாய்ப்பு கிடைத்​துள்​ளது. இதனைத் தங்​களது முன்​னேற்​றத்​துடன் நிறுத்​திக்​கொள்​ளாமல், தங்​கள் சொந்த கிராமங்​களில் உள்ள ஏழை மாணவர்​களின் கல்வி வளர்ச்​சிக்​கும் உதவ வேண்​டும். மாணவர்​களாகிய உங்​களுக்கு ஏதாவது கிராமத்​துடன் குடும்​பத் தொடர்பு இருக்​கும். அந்​தக் கிராமத்​தைக் கண்​டறிந்து, அங்​குள்ள குறைந்​தது இரண்டு குடும்​பங்​களைச் சந்​தித்து, உயர்​கல்​வி​யின் அவ​சி​யத்தை எடுத்​துரைக்க வேண்​டும். தாங்​கள் எவ்​வாறு படித்து உயர்​கல்வி நிறு​வனத்​துக்கு வந்​தோம் என்​பதை விளக்கி, அவர்​களது குழந்​தைகளும் உயர்​கல்வி பெறு​வதற்கு ஊக்​கமளிக்க வேண்​டும்.

‘இந்து’ என்.ரவி: சுமங்​கலா ஸ்​டீல் நிறு​வனத்​தின் கல்வி உதவித்​தொகை வழங்​கும் திட்​டம் மாணவர்​களின் கனவு​களை நனவாக்க உதவு​கிறது. தங்​களது குழந்​தைகள் நல்ல கல்​வியைப் பெற்று, வாழ்க்​கை​யில் உயர்ந்த நிலையை அடைய வேண்​டும் என்​பதே பெற்​றோரின் கனவாகும். ஆனால், பொருளாதார நெருக்​கடிகள் காரண​மாக அவை நனவாவதில்லை. இந்த தடைகள், நிறைவேறாத கனவு​கள் ஆகியவற்றில் இருந்து மாணவர்​களை விடுவித்து, அவர்​களின் முழுத் திறனையும் வெளிப்​படுத்த சுமங்​கலா போன்ற கல்வி உதவித்​தொகைத் திட்​டங்​கள் உதவு​கின்​றன.

மாணவர்​கள் பெறும் கல்​வியும், வாழ்க்​கை​யில் அடையும் முன்​னேற்​றமும், இந்​தச் சமூகத்​தின் பங்​களிப்​பால் சாத்தியமாகின்றது. எனவே, சமூகத்​திற்​குத் திருப்​பிச் செலுத்த வேண்​டிய கடமை உங்​களுக்கு இருக்​கிறது. மற்​றவர்​களுக்கு உதவுவதன் மூலம், சமூகம் உங்​களுக்கு வழங்​கிய​வற்​றுக்கு நீங்கள் நன்​றிக்​கடன் செலுத்து​கிறீர்​கள். இவ்​வாறு அவர்​கள் பேசினர்.

இந்​நிகழ்ச்​சி​யில் சுமங்​கலா ஸ்​டீல் நிறு​வனர் ராஜேந்​திர சபாநாயகம், சுமங்​கலா ஸ்​டீல் நிறு​வனத்​தின் தலை​வர் அஸ்​வின் சபாநாயகம், தலைமை பொது மேலா​ளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT