சென்னை: திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அரக்கோணம் - திருத்தணி இடையே 3 பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இன்று (ஆக.5) முதல் இயக்கப்பட உள்ளன.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள், திருத்தணி வரை நீட்டிக்கப்பட உள்ளன.
அதன்படி, அரக்கோணம் - திருத்தணி இடையே ஆக.5 முதல் ஆக.7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு பாசஞ்சர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன் விவரம்: அரக்கோணத்தில் இருந்து காலை 10.20, மதியம் 1.00, பிற்பகல் 2.50 ஆகிய நேரங்களில் சிறப்பு பாசஞ்சர் ரயில்கள் புறப்பட்டு, முறையே காலை 10.40, மதியம் 1.20, பிற்பகல் 3.10 ஆகிய நேரங்களில் திருத்தணியை அடையும்.
இந்த ரயில்கள் திருத்தணியில் இருந்து காலை 10.50, மதியம் 1.30, பிற்பகல் 3.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு, முறையே பகல் 11.10, மதியம் 1.48, பிற்பகல் 3.38 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தை அடையும். இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.