கல்வி

​விஐடி பல்கலைக்கழகம், ‘இந்து தமிழ் திசை’, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ‘நாளைய விஞ்ஞானி 2025’ அறிவியல் திருவிழா

செய்திப்பிரிவு

சென்னை: வேலூர் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் டெக்​னாலஜி (விஐடி) உடன் இணைந்​து, ‘இந்து தமிழ் திசை’ மற்​றும் தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் வழங்​கும் ‘நாளைய விஞ்​ஞானி 2025’ எனும் அறி​வியல் நிகழ்வு இந்த ஆண்​டும் நடை​பெற உள்​ளது.

மாணவர்​களிடையே அறி​வியல் சிந்​தனையைத் தூண்​டும் வகை​யிலும், அறி​வியல் திறனை வெளிக்​கொணரும் நோக்​கிலும் ‘நாளைய விஞ்​ஞானி’ எனும் சிறப்​புமிக்க நிகழ்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இதில் தமிழகம், புதுச்​சேரியைச் சேர்ந்த 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்​கள் ஜூனியர் பிரி​விலும், 11, 12-ம் வகுப்பு மாணவர்​கள் சீனியர் பிரி​விலும் பங்​கேற்​கலாம். ஒரு குழு​வில் குறைந்​த​பட்​சம் 2 மாணவர்​களும், அதி​கபட்​சம் 3 மாணவர்​களும், அவர்​களுக்கு வழி​காட்டி ஆசிரியர் ஒரு​வரும் இருக்க வேண்​டும்.

என்ன செய்ய வேண்​டும்? - மாணவர்​கள் தங்​கள் பகு​தி​யில் நில​வும் ஒரு பிரச்​சினையை அடை​யாளம்​கண்​டு,அதற்​கான காரணங்​களை அறி​வியல் கண்​ணோட்​டத்​துடன் ஆராய வேண்​டும். அறி​வியல் வழி​முறை​களைப் பயன்​படுத்​தி, அந்​தப் பிரச்​சினைக்கு தீர்​வு​காண வேண்​டும். பின்​னர், மாணவர்​கள் கண்​டறிந்த புது​மை​களை ஆய்வு அறிக்​கை​யாக தயாரிக்க வேண்​டும்.

மாணவர்​கள் தாங்​கள் தொகுத்த ஆய்​வறிக்​கையை PDF File-ஆக இத்​துடன் இணைக்​கப்​பட்​டுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து சமர்ப்​பிக்க வேண்​டும்.

ஜனவரி, பிப்​ர​வரி மாதங்​களில் 5 இடங்​களில் மண்டல அளவி​லான ஆய்வு சமர்ப்​பித்​தல் நிகழ்​வு​கள் நடை​பெறும். சிறந்த ஆய்​வுக் கட்​டுரைகளைச் சமர்ப்​பிக்​கும் மாணவர்​கள், மண்டல அளவி​லான அறி​வியல் திரு​விழா​வில் பங்​கேற்​பர். விழா​வில் பங்​கேற்​கும் அனைத்து மாணவர்​கள், ஆசிரியர்​களுக்கு சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும்.

இதில் தேர்​வான மாணவர்​கள் பிப்​ர​வரி இறு​தி​யில் சென்னை விஐடி வளாகத்​தில் நடை​பெறும் மாநில அளவி​லான அறி​வியல் திரு​விழா​வில் பங்​கேற்​பர். வெற்​றி​பெறும் மாணவர்​களுக்கு பரிசுகள் வழங்​கப்​படும். இதுகுறித்த கூடு​தல் விவரங்​களுக்கு 99440 29700 என்ற செல்​போன் எண்​ணில் தொடர்​பு​ கொள்​ள​வும்.

விஐடி பல்​கலை. துணைத் தலை​வர் முனை​வர் ஜி.​வி.செல்​வம் கூறும்​போது, “வளர்ந்து வரும் அறி​வியல் - தொழில்​நுட்ப யுகத்​தில் மாணவர்​கள் தங்​களது அறி​வியல் சிந்​தனையை வளர்த்​துக் கொள்​வது அவசி​ய​மாகும். அறி​வியல் கண்​ணோட்​டமே மாணவர்​களை மனப்​பாடக் கல்​வியி​லிருந்து மடை​மாற்​றி, அனுபவக் கல்விக்கு அடித்​தளமிடு​கிறது.

பயிற்​சி, பரிசோதனை, தரவு​களை ஒட்​டிய பகுப்​பாய்​வு​கள் மூலம், ஆராய்ச்சி அடிப்​படை​யில் கல்வி கற்​கும்​போது, அந்த அறிவு நிலைத்​த​தாக​வும், எதிர்​கால வாழ்க்​கைக்கு வலுசேர்ப்​ப​தாக​வும் அமை​கிறது. அறி​வியல் பார்​வை​தான், மாணவர்​களிடையே படைப்​பாற்​றல் மற்​றும் புதுமை சிந்​தனை​களை வளர்த்​து, அவர்​கள் நாளைய பொறுப்​புள்ள குடிமக்​களாக உரு​வாக வழி​வகுக்​கும்.

இயற்​பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்​கிங் குறிப்​பிடு​வதைப்​போல, அறி​வியலை வெறும் மதிப்​பெண்​களுக்​காக அணு​காமல், எதிர்​கால வாழ்க்​கையை வடிவ​மைக்​கும் கரு​வி​யாகக் கரு​தி, புதி​யனவற்​றைக் கற்​பதும், கண்​டு​பிடிப்​பதும் தான் நோக்​க​மாக இருக்க வேண்​டும். அத்​தகைய நோக்​கில்​தான் விஐடி சென்​னை​யும், ‘இந்து தமிழ் திசை’​யும் இணைந்து நாளைய விஞ்​ஞானி அறி​வியல் நிகழ்வை நடத்​துகின்​றன” என்​றார்.

மண்​டலம் வாரி​யாக பதிவுசெய்ய கடைசி நாள் மற்​றும் போட்டி தேதி:

திருநெல்​வேலி ஜன. 17, ஜன. 24

திருச்சி ஜன. 31, பிப்​. 7,

சென்னை ஜன. 31, பிப். 8

மதுரை பிப்​. 7, பிப். 15

கோவை பிப். 14, பிப். 22

SCROLL FOR NEXT