கல்வி

பொங்கலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாள் விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: பொங்​கல் பண்​டிகை வரும் 15-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. மறு​நாள் 16-ம் தேதி மாட்​டுப் பொங்​கல், 17-ம் தேதி காணும் பொங்​கல் வரு​கிறது.

அதனால், ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்​களுக்கு அரசு விடுமுறை அளிக்​கப்​பட்​டது. 18-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை வழக்​க​மான விடுமுறை.

இந்​நிலை​யில், பொங்​கலுக்கு முந்​தைய நாளான ஜன.14-ம் தேதி போகி பண்​டிகை கொண்​டாடப்​படு​வ​தால், அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்​டும் என்று கோரிக்​கைகள் வைக்​கப்​பட்​டன.

அன்று விடுமுறை அளித்​தால், தொடர்ச்​சி​யாக 5 நாட்​கள் விடுமுறை கிடைக்​கும் என்று எதிர்​பார்த்தனர். இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அனைத்து பள்​ளி​களுக்​கும் ஜன. 14-ம் தேதி விடுமுறை அளிக்​கப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித்​ துறை அறி​வித்​துள்​ளது. இதனால், மாணவர்​களும், ஆசிரியர்​களும்​ மகிழ்ச்​சி அடைந்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT