கல்வி

தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கோடை வெயில் தாக்​கம் காரண​மாக, 1 முதல் 12-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களுக்கு பள்​ளி​கள் ஜூன் 4-ம் தேதி திறக்​கப்​படும் என்று பள்​ளிக் கல்​வித்துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக் கல்​வித் துறை நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து புதிய கல்வி ஆண்​டில் (2026-27) 4 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதி​யும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி​யும் பள்​ளி​கள் மீண்​டும் திறக்​கப்​படும் என்று முன்​னர் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், வெவ்​வேறு வகுப்​பு​களில் படிக்​கும் குழந்​தைகளைக் கொண்ட குடும்​பங்​கள் பல்​வேறு சிரமங்​களை எதிர்​கொள்​கின்​றனர். அனைத்து வகுப்​பு​களுக்​கும் ஒரே நாளில் பள்​ளி​கள் திறக்க வேண்​டும் என்று பெற்​றோர், ஆசிரியர்​கள் மற்​றும் பல்​வேறு தரப்​பினரிடம் இருந்து கோரிக்​கைகள் பெறப்​பட்​டன.

தவிர, வானிலை முன்​னறி​விப்​பு, பள்​ளி​கள் மீண்​டும் திறக்​கப்​படு​வதற்கு முன்பு சுகா​தா​ரம், குடிநீர் வசதி​கள், போக்​கு​வரத்து ஏற்​பாடு​கள் ஆகியவை தொடர்​பான ஆயத்த பணி​களை​யும் தமிழக அரசு ஆய்வு செய்​தது. இவற்றை கவன​மாக பரிசீலித்த பின்​னர், பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் அறி​வுறுத்​தலின்​படி, தமிழகத்​தில் உள்ள அனைத்து பள்​ளி​களும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி திறக்​கப்​படும். இதற்கு தேவை​யான ஆயத்​தப் பணி​கள் முடிக்​கப்பட வேண்​டும்.

மேலும், இதற்கு பெற்​றோர், ஆசிரியர்​கள், பள்ளி நிர்​வாகங்​கள் மற்​றும் பொது​மக்​கள் ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. முன்​ன​தாக, பள்​ளி​கள் திறப்பை தள்​ளிவைக்க வேண்​டுமென தி​முக உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சிகளும் கோரிக்​கை விடுத்​தது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT