கோப்புப் படம்

 
கல்வி

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.

பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம் தேதி முடிகிறது. இதைத் தொடர்ந்து ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு, இறுதி தேர்வுகள் நடைபெறவுள்ளன.

          

ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஏப்.6 முதல் 16-ம் தேதி வரையிலும், 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

இதையடுத்து 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஏப். 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

எனினும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போக வாய்ப்பு இரு்ப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறைவிடப்படுகிறது.

பள்ளிகள், வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது தேர்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் 48 நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

வினாத்தாள் பதிவிறக்கம்

இதனிடையே வினாத்தாள் பதிவிறக்கம் குறித்த வழிகாட்டு தலை மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக்கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் 1 முதல் 8-ம் வகுப்பு​களுக்கு மூன்​றாம் பரு​வத் தேர்​வுகள் (முழு ஆண்​டுத் தேர்​வு) ஏப்.1 முதல் 16-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன.

இதற்​கான கால அட்​ட​வணை ஏற்​கெனவே வெளி​யிடப்​பட்​டு, தேர்வு நடத்​து​வதற்​கான அறி​வுறுத்​தல்​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த நிலை​யில், தேர்​வுக்​கான வினாத்​தாள்​களை பள்​ளி​கள் பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் தற்​போது வெளி​யிடப்​படு​கின்​றன.

அதன்​படி, 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்​களின் பயிற்​றுமொழி மற்​றும் பாட​வாரி​யாக வினாத்​தாள்​களை உரிய எண்​ணிக்​கை​யில் நகலெடுத்து வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் மூல​மாக வழங்க வேண்​டும். வினாத்​தாளை எமிஸ் தளத்​தில் மார்ச் 30-ம் தேதி வரை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

SCROLL FOR NEXT