பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. சென்னை எழும்பூர், மாநில பெண்கள் பள்ளியில் இறுதித் தேர்வை முடித்த மகிழ்ச்சியில் மாணவிகள்.படம்: எஸ்.சத்தியசீலன்

 
கல்வி

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி

விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 8-ல் தொடங்குகிறது

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்​தது. இதனால், மாணவர்​கள் மிக​வும் மகிழ்ச்​சி​யுடன் காணப்​பட்​டனர். விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​.8-ம் தேதி தொடங்க உள்​ளது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தது. நிறைவு நாளில் கணினி அறி​வியல், உயிரி வேதி​யியல், தொடர்பு ஆங்​கிலம், இந்​திய கலாச்​சா​ரம், அரசி​யல் அறி​வியல் உள்​ளிட்ட பாடங்​களுக்​கான தேர்​வு​கள் நடை​பெற்​றன. தமிழகம் முழு​வதும் 3.89 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தேர்​வு​களை எழு​தினர். இதில் கணினி அறி​வியல் தேர்வு கடின​மாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

          

இதுகுறித்து மாணவர்​கள், ஆசிரியர்​களிடம் கேட்​ட​போது, “இது​வரை இல்​லாத அளவுக்கு கணினி அறி​வியல் வினாத்​தாளில் மறை​முக வினாக்​கள் அதி​கம் இருந்​தன. குறிப்​பாக, 5 மதிப்​பெண் பகு​தி​யில் 2 கேள்வி​களும், 3 மதிப்​பெண் பகு​தி​யில் 3 கேள்வி​களும் கடின​மாக இருந்​தன. ஒரு மதிப்​பெண் கேள்வி​கள் எளி​தாக இருந்​த​தால் தேர்ச்சி பெறு​வ​தில் சிக்​கல் இருக்​காது. ஆனால், நன்​றாக படிக்​கும் மாணவர்​கள்​கூட அதிக மதிப்​பெண் பெறு​வ​தில் பாதிப்பை ஏற்​படுத்​தும்” என்​றனர்.

பொதுத் தேர்வு முடிவடைந்​த​தால், மாணவ, மாணவி​கள் மிக​வும் மகிழ்ச்​சி​யுடன் காணப்​பட்​டனர். சில பள்​ளி​களில் பிரிவு உபச்​சார விழாக்​களும் நடத்​தப்​பட்​டன. மாணவர்​கள் பள்ளி வளாகத்​தை​விட்டு வெளி​யேறும்​போது அசம்​பா​விதங்​கள் ஏதும் நிகழாமல் தடுக்க காவல் அதி​காரி​களை பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்த வேண்​டும் என தலைமை ஆசிரியர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்தி இருந்​தது. அதன்​படி, சென்னை உட்பட பல்​வேறு பகு​தி​களி​லும் தேர்வு மையங்​களில் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய சுமார் 8 லட்​சம் மாணவர்​களின் விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​ரல் 8 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​காக தமிழகம் முழு​வதும் 80-க்​கும் மேற்​பட்ட முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. திருத்​துதல் பணி​களில் சுமார் 46 ஆயிரம் முது​நிலை ஆசிரியர்​கள் ஈடுபட உள்​ளனர். தொடர்ந்​து, மதிப்​பெண் பதிவேற்​றம் உள்​ளிட்ட பணி​களை முடித்​து, திட்​ட​மிட்​டபடி தேர்வு முடிவு​கள் மே 8-ம் தேதி வெளி​யிடப்​படும் என்று துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT