கல்வி

யோகா, இயற்கை மருத்துவம் முதுநிலைப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு (எம்.டி. யோகா & நேச்சுரோபதி) மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதன்படி, தகுதியானவர்கள் செப்.3-ம் தேதி மாலை 5 மணிக்குள் www.tnayushselection.org என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதில் சிறப்புப் பிரிவின்கீழ் விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைனில் சமர்ப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, தகவல் தொகுப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ‘செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, அரும்பாக்கம், சென்னை - 600106’ என்ற முகவரிக்கு செப்.3-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT