கல்வி

விஐடி பல்கலையில் பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

வி.செந்தில்குமார்

வேலூர்: விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ம் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கான (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (அக்டோபர் 20) தொடங்கியது.

https://viteee.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னா் நுழைவுத் தோ்வு ஒரே கட்டமாக 2027-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி தொடங்கி மே 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 133 நகரங்களிலும், வெளிநாடுகளில் 9 தோ்வு மையங்களிலும் நுழைவுத் தோ்வு நடைபெறும். மாணவா்கள் தாங்கள் படித்த இடம் அல்லது சொந்த ஊரை அடிப்படையாகக் கொண்டு தோ்வு மையங்களை தேர்ந்தெடுத்து நுழைவுத் தேர்வு எழுதலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT