கல்வி

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: விழுப்புரம் மாணவர் தேசிய அளவில் 12-வது இடம்

செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருத்​து​வப் படிப்​பு ​களுக்​கான நீட் மறு​தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. பஞ்​சாப், ஹரி​யானா மாணவர்​கள் 720-க்கு 715 மதிப்​பெண்​கள் எடுத்து முதலிடம் பிடித்​துள்​ளனர். தமிழகத்​தின் விழுப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த மாணவர் வேங்​கடபதி வேலா​யுதம் தேசிய அளவில் 12-வது இடம் பிடித்​துள்​ளார்.

நாடு முழு​வதும் அரசு, தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. தேசி​யத் தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் இத்​தேர்வை நடத்தி வரு​கிறது.

அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. தேர்​வுக்கு முன்​ன​தாகவே வினாத்​தாள் கசிந்​தது உறுதி செய்​யப்​பட்​ட​தால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்​திய அரசு ரத்து செய்​தது. வினாத்​தாள் கசிவுக்கு காரண​மானவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

இதையடுத்​து, பலத்த பாது​காப்​புடன் நீட் மறு​தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்​தப்​பட்​டது. நாடு முழு​வதும் 5,500 மையங்​களில் தேர்வு நடை​பெற்​றது. 20 லட்​சம்பேர் தேர்வு எழு​தினர்.

தமிழகத்​தில் 1.36 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர். இந்​நிலை​யில், https://neet.nta.nic.in என்ற இணை​யதளத்​தில் நீட் மறு​தேர்வு முடிவு​களை தேசி​யத் தேர்​வு​கள் வாரி​யம் நேற்று முன்​தினம் இரவு வெளி​யிட்​டது. இத்​தேர்​வில் 11.21 லட்​சம் பேர் (56 சதவீதம்) தகுதி பெற்​றுள்​ளனர். மாணவர்​களை​விட மாணவி​களே அதிக அளவில் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். பஞ்​சாப் மாநிலத்​தைச் சேர்ந்த ஆர்​யன் குப்​தா, ஹரி​யா​னாவைச் சேர்ந்த பன்​சூல் பன்​சால் ஆகிய இரு மாணவர்​கள் 720-க்கு 715 மதிப்​பெண்​கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்​றுள்​ளனர்.

விழுப்​புரத்​தைச் சேர்ந்த பிரபல எலும்பு முறிவு மருத்​து​வர் அஞ்​சன் ராம்​சந்​திர நாத்​தின் மகன் வேங்​கடபதி வேலா​யுதம், 720-க்கு 705 மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளார். இவர், சென்​னை​யில் உள்ள பிரபல தனி​யார் பள்​ளி​யில் படித்​து, நீட் தேர்வை எழு​தி​னார். தமிழகத்​தில் முதல் இடத்​தை​யும், நாட்​டின் தரவரிசை பட்​டியலில் 12-வது இடத்​தை​யும் பிடித்​துள்​ளார்.

700-க்கு மேல் 19 பேர், 690-க்கு மேல் 138 பேர், 650-க்கு மேல் 1,492 பேர், 600-க்கு மேல் 10,160 பேர், 500-க்கு மேல் 90,780 மாணவர்​கள் மதிப்​பெண் பெற்​றுள்​ளனர். பொதுப் பிரி​வில் 2.91 லட்​சம் பேர், ஓபிசி பிரி​வில் 5.12 லட்​சம் பேர், எஸ்சி பிரி​வில் 1.59 லட்​சம் பேர், எஸ்டி பிரி​வில் 63,716 பேர், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய பொதுப் பிரி​வில் 95,026 பேர், மாற்​றுத் திற​னாளி​கள் 3,666 பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

தமிழகத்​தில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வரும் 23-ம் தேதி கடைசி நாள். தற்​போது நீட் தேர்வு முடிவு​கள் வெளி​யாகி​யுள்​ள​தால், மாணவர்​களின் நீட் மதிப்​பெண்​களை பெற்​று, விண்​ணப்​பத்​தில் சேர்க்​கும் பணிநடந்து வரு​கிறது. அகில இந்​தி​யக் கலந்​தாய்​வு தொடங்​கிய பிறகு, தமிழகத்​தில்​ கலந்​தாய்​வு தொடங்​க உள்​ளது.

SCROLL FOR NEXT