கோப்புப் படம்

 
கல்வி

முதுநிலை பயோ டெக். படிப்புக்கான கேட்-பி, பிஇடி தேர்வு முடிவு வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: ​முது​நிலை பயோ டெக்​னாலஜி படிப்​பு​களுக்​கான கேட்​-பி மற்​றும் பிஇடி நுழைவுத் தேர்வுகள் கடந்த மே 17-ம் தேதி கணினி வழி​யில் நடத்​தப்​பட்​டன. கேட்​-பி தேர்வில் 9,538 பேரும், பிஇடி நுழைவுத் தேர்வில் 12,700 பேர் பங்​கேற்​றனர்.

இந்​நிலை​யில், இத்​தேர்வு முடிவு​களை என்​டிஏ தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. https://exams.nta.nic.in/gat-bet என்ற இணை​யதளத்​தில் மாணவர்​கள் அறிந்து கொள்​ளலாம். மதிப்​பெண் பட்​டியலை​யும் பதி​விறக்​கம் செய்​ய​லாம். இதில் ஏதேனும் சிரமங்​கள், சந்​தேகம் இருந்​தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்​ணில் தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம். கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT