கோப்புப் படம்

 
கல்வி

‘நீட்’ தேர்வுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: ​நாடு முழு​வதும் மே 3-ம் தேதி நடை​பெற உள்ள ‘நீட்’ தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட் இணை​யதளத்​தில் இன்று வெளி​யாகிறது.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​புக்​கான மாணவர் சேர்க்​கைக்​கும் நீட் தேர்வு கட்​டா​யம். இந்த ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் மே 3-ம் தேதி நடை​பெற உள்​ளது. தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​களில் தேர்வு நடை​பெறும்.

என்​டிஏ இணை​யதளத்​தில் (https://neet.nta.nic.in) இத்​தேர்​வுக்​கான விண்​ணப்ப பதிவு கடந்த பிப்​.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. விண்​ணப்ப பரிசீலனை​யும் முடிந்த நிலை​யில், மேற்​கண்ட இணை​யதளத்​தில் இன்று ஹால் டிக்​கெட் பதிவேற்​றம் செய்​யப்பட உள்​ளது. தேர்வுக்கு விண்​ணப்​பித்த மாணவ, மாணவி​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

இது​வரை இல்​லாத வகை​யில் நீட் தேர்​வுக்கு 26 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெறும்.

SCROLL FOR NEXT