அமைச்சர் கோவி.செழியன்

 
கல்வி

விரைவில் துணைவேந்தர்கள் நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில், மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர். இதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்” என்றார்.

          

முன்னதாக, தமிழக பல்​கலைக்​கழகங்களுக்கு துணைவேந்​தர்​களை நியமிக்​கும் மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் போட்​டதை அடுத்​து, உச்ச நீதி​மன்​றமே தனக்குரிய அதி​காரத்​தைப் பயன்படுத்தி அந்த மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் வழங்கி சட்​ட​மாக்கியது. இதை எதிர்த்து பாளை​யங்கோட்​டையைச் சேர்ந்த பாஜக வழக்​கறிஞர் கே.வெங்​க​டாச்சலபதி சென்னை உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு,துணைவேந்​தர்​களை நியமிக்க இடைக்​கால தடை விதித்​தது.

இந்த தடையை நீக்​கக் கோரி​யும், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த விசா​ரணையை உச்ச நீதி​மன்​றத்​துக்கு மாற்​றக் கோரி​யும் தமிழக அரசு தரப்​பில்உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை உச்ச நீதி​மன்​றம் தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு நேற்று விசா​ரித்​தது.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்​டபிறகு, துணைவேந்​தர் நியமன சட்​டத்​துக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் விதித்த இடைக்​கால தடையை ரத்து செய்தது. மேலும் நிலு​வை​யில்​ உள்​ள இந்​த மனுவை 6 ​வாரங்​களுக்​குள்​ வி​சா​ரிக்​க​வும்​, இந்​த வழக்​கு தொடர்​​பாக ஏற்​கெனவே தெரி​வித்​த கருத்​துகளை கேட்க​வும்​ உத்​தரவிட்​டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT