கல்வி

வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பொதுத் தேர்​வு​களில் வட மாவட்​டங்​களில் தேர்ச்சி சதவீதத்தை அதி​கரிக்​கும் வித​மாக கல்​விப் பணி​கள் தீவிரப்​படுத்​தப்​படும் என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​களுக்கு வாழ்த்​துக்​கள். எதிர்​பார்த்த மதிப்​பெண் கிடைக்​காத மாணவர்​கள் சோர்ந்​து​வி​டா​மல் அடுத்​தகட்​டத்தை நோக்கி பயணிக்க வேண்​டும். தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் இடைநிற்​றலை குறைக்க பல்​வேறு நடவடிக்​கைகள் முன்​னெடுக்​கப்​படும்.

சமூக, பொருளா​தார, தனி​நபர் காரணங்​களுக்​காக பள்​ளிக்கு வரா​விட்​டால் உடனே அந்த மாணவரின் வீட்​டுக்கே சென்று பள்​ளிக்கு வரவைக்க முயற்சி மேற்​கொள்​வோம். மெல்​லக் கற்​கும் மாணவர்​கள் மீது கூடு​தல் கவனம் செலுத்தி அவர்​களை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்ல அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

பள்​ளிக் கல்​வித் துறை​யில் கடந்த காலங்​களில் கொண்​டு​வரப்​பட்ட திட்​டங்​கள் தொடரும். ஆசிரியர்​களின் ஒத்​துழைப்பு இல்​லாமல் நாம் அடுத்​தகட்​டத்​துக்​குச் செல்ல முடி​யாது. ஆசிரியர்​கள் காலிப் பணி​யிடங்​கள் குறித்து நீதி​மன்​றத்​தில் சில வழக்​கு​கள் உள்​ளன.இந்த பிரச்​சினைக்கு நல்ல வழிபிறக்​கும்.

பொதுத் தேர்​வு​களில் வட மாவட்​டங்​களில் தேர்ச்சி சதவீதத்தை அதி​கரிக்​கும் வித​மாக கல்​விப் பணி​கள் தீவிரப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார். நேற்று வெளியான பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்​சி​யில் திரு​வண்​ணா​மலை, கிருஷ்ணகிரி, விழுப்​புரம் உள்​ளிட்ட வடமாவட்​டங்​களே கடைசி 10 இடங்​களில் உள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT