லின்னெட்
என் பெயர் லின்னெட். நான் லயோலா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய மிக முக்கியமான காரணம் ‘நான் முதல்வன்’ திட்டம்.
கல்லூரி இரண்டாம் ஆண்டு மூன்றாவது செமஸ்டரில், எங்கள் அனைவருக்கும் கட்டாய திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதுவரை நான் தொழில்துறை உலகம் எப்படி இருக்கும், என்ன திறன்கள் தேவை, எதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். ஆனால் நான் முதல்வன் திட்டம் என் எதிர்காலத்தை தெளிவாக அமைத்தது.
Digital Marketing, Microsoft Essentials, Quantum Computing, Industry IoT, Industry 4.0 போன்ற நவீன தொழில்துறை பாடங்களை இத்திட்டம் கைப்பிடித்து கற்றுக் கொடுத்தது. இது புத்தகத்தில் மட்டும் கிடைக்கும் அறிவு இல்லை - நாம் நேரடியாக, வேலைக்குச் செல்ல தேவையான நுட்பமான திறன்கள்.
முக்கியமாக, பெரிய தொழில் வல்லுநர்கள் எங்கள் கல்லூரிக்கே வந்து Unity, AR/VR Simulation, Power BI Dashboarding போன்ற advanced tools-ஐ எங்கள் கணினியில் எங்களுக்கு நேரடியாக கற்றுக் கொடுத்தார்கள். நான் இதைப் போன்ற அனுபவம் கிடைக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஒவ்வொரு நாள் பயிற்சியும் எனக்கு, “நானும் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யலாம்” என்ற நம்பிக்கையை வளர்த்தது.
கல்லூரி முடிந்தபின் என்ன செய்யலாம் என்று தெரியாமல் இருந்த நேரத்தில், நான் முதல்வன் எங்களுக்காக உருவாக்கிய நான் முதல்வன் மாநில அளவிலான வேலை வாய்ப்பு முகாம் (TNSLPP) என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய கதவு திறந்தது. நான் பங்கேற்ற நேர்காணல்களில் Tech Mahindra மற்றும் Infosys இரண்டு நிறுவனங்களிலும் நான் தேர்வு செய்யப்பட்டேன். இந்தச் சாதனை முழுமையாக நான் முதல்வன் கற்றுத் தந்த பயிற்சிகளின் பலன்.
இப்போது நான் Infosys-ல் கை நிறைய சம்பாதிக்கிறேன். இதெல்லாம் எனக்கு கனவாகவே இருந்தது. ஆனால் அந்தக் கனவை நிஜமாக்கி தந்தது ‘நான் முதல்வன்’ திட்டம். இந்த திட்டம் என் வாழ்க்கையை மாற்றியது மட்டும் அல்ல - எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது, என்னை industry-ready ஆக்கியது, என் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்தது, என் எதிர்காலத்துக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைத்தது.
எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நான் முதல்வன் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல - ஒரு எதிர்காலம். ஒரு நம்பிக்கை. ஒரு புதிய வாழ்க்கை.
இந்த வாய்ப்பை உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். “நான் முதல்வன்” எனக்கு திறனையும், துணிவையும், தொழில்வாய்ப்பையும் தந்த திட்டம். என் வாழ்க்கையை முன்னேற்றிய மிகப் பெரிய காரணம் இதுவே.
வெற்றி நிச்சயம் திட்டம்: என் பெயர் இன்பராஜ். நான் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் வசிக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக கடலில் மீன்பிடி விசைப் படகில் தொழிலாளியாக உழைத்து வந்தேன். மூன்று வருடங்களாக விசைப் படகில் இரண்டாம் கட்ட ஓட்டுநராக பணியாற்றியும் வந்தேன். வாழ்க்கை சுமாராகச் சென்றாலும், ஒரு நிலைத்தன்மையும் வளர்ச்சியும் எட்டப்படவில்லை.
அந்த நேரத்தில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமும் TNSDC-யும் "வெற்றி நிச்சயம் திட்டம்" மூலம் இணைந்து நடத்திய “ஏழு நாள் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் பயிற்சி” பற்றி அறிந்தேன். இந்த வாய்ப்பு எனக்கு ஒரு புதிய திசையைக் காட்டியது. இந்த ஏழுநாள் பயிற்சி, என் 20 ஆண்டு அனுபவத்தையும் தாண்டி, தொழில்முறை திறனை கற்றுத் தந்தது.
இன்பராஜ்
பயிற்சிக்கு பின், நான் இரண்டாம் கட்ட ஓட்டுநரிலிருந்து முதல் கட்ட ஓட்டுநராக பதவி உயர்வு பெற்றேன். அதோடு, வருமானமும் 5% லிருந்து 8% ஆக உயர்ந்து, என் குடும்பத்திற்கும் வாழ்க்கைக்கும் ஒரு வலிமையான அடித்தளமாக மாறியது. இன்று நான் கடலில் மட்டும் அல்ல, உலகளாவிய அளவிலும் பணிபுரியக் கூடிய திறன் மற்றும் உரிமையுடன் நிற்கிறேன்.
இந்த உரிமம், மீனவர்களின் வருமானத்தையும் வாழ்க்கையையும் மாற்றக்கூடிய ஒரு பெரிய பரிசு. இந்த வாய்ப்பை எங்களுக்கு அளித்த தமிழ்நாடு அரசு மற்றும் வெற்றி நிச்சயம் திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடலோடு இணைத்து காப்பாற்றுகிறது. ஒரு மீனவனாக மட்டுமல்ல, ஒரு தந்தையாக, என் குடும்பத்திற்கான பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் வழங்கியதற்காக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.